பக்கம்:ஒத்தை வீடு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திகம் 莺 அன்பு, எந்தக் கட்டாயத்திற்கும் உட்பட்டதல்ல. அந்த அன்பு, நீர் தேக்கமல்ல. தானாய்ப் பீறிடும் நீரூற்று. ஒன்கிட்டப் பேசின. பிறகு, என் மனம் லேசானது மாதிரித்தெரியுது. ஒன்கிட்ட மனைவியாய்ப் பேசற உரிமையை, நீ தராமல் நான் எடுக்கத் தயாராயில்லை. ஒன்னை ஒரு தோழியாய் நினைத்துத்தான் பேசுறேன். நான் பேசுறதுல ஒனக்குச் சந்தோசமோ இல்லியோ எனக்கு ஒரு நிம்மதி. + காரண., நானும் ஒன்னை மாதிரி ஒரு வகையிலே, அனாதரவான மனோகர், விம்மினான். உடனடியாய் அந்த விம்மலை, அடக்கினான். தனக்குத்தானே ஆணையிட்டான். அழுது ஆதாயம் தேடப்படாது. நான் வயதுக்கு வந்தப் பெரியவன். அழமாட்டேன். எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன்: யந்திர சங்கரி, பெண்ணானாள். அந்தப் பெண், மெள்ள மெள்ள மனைவியாக மாறிக் கொண்டிருந்தாள். இந்தச் சமயத்தில், மனோகரும் யதார்த்தக் குரலில் கேட்டான். "இப்போ, எனக்கு ஒரு பதில் வேணும். சங்கரியை, இனிமேல் நான் எப்படிப் கூப்பிடணும்? வழக்கம்போல் நீ என்றா, இல்லை நீங்கன்னா. ரெண்டு எழுத்துத்தான் வித்தியாசம். ஆனால், இது நம்மை ரெண்டாகவும் பிரிக்கலாம்; ஒன்றாகவும் ஆக்கலாம். என் முடிவைச் சொல்லிட்டேன். அதேசமயம், சங்கரி முடிவையும் மதிக்கிறேன். மனசு கேட்கல. நான் நடந்துகிட்டதுக்குப் பிராயச்சித்தம் செய்யனும். எது என்கிறது எனக்கு இப்பத் தெரியணும். இல்லாட்டியும். நாளைக்குச் சொல்லலாம்." சங்கரி, மனோகரை மலங்க மலங்கப் பார்த்தாள். அவன், கண் கலக்கத்தில், அவள் கண்கள், கசிந்தன. ஒரு விநாடி அவனையே அசைவற்றுப் பார்த்தவள், மறு விநாடி அவன் மேல் சாய்ந்தாள். அவன் கழுத்தை இரண்டு கரங்களாலும், சுற்றி வளைத்து, அவனை தன் பக்கமாகச் சரித்தாள். ஏதோ பேசப் போனவனின் வாயைப் பொத்தினாள். குலுங்கிக் குலுங்கி அழுதழுது, அவனையும் குலுக்கினாள். அவன் தோள்களை, அழுத்தப் பற்றி, அவன் கழுத்தில் முகம் போட்டாள். சத்தம் போட்டே கத்தினாள். "நான் போகமாட்டேன். ஒங்கள விட்டுட்டுப் போகமாட்டேன். என்ன ஆனாலும் சரி. எப்படி ஆனாலும் சரி. நீங்க என்னை விட்டுப் போறதுக்கு விடமாட்டேன். பார்த்துடலாமா." சங்கரி, அவனைச் சவாலாகப் பார்த்தாள். ஒரு குழந்தையைப் போல பார்த்தாள். அவனை, பொய்யடியாய், கன்னத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/122&oldid=762175" இலிருந்து மீள்விக்கப்பட்டது