பக்கம்:ஒத்தை வீடு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 புதைமண் சமயம் உறுதியாகவும் பேசக் கூடியவள். ஆடை அலங்காரத்தில் ஆசை கொள்ளாதவள். பிறர் துன்பத்தை தன் துன்பமாய் எடுத்துக் கொள்கிறவள். என் துன்பத்தை நீ பகிர்ந்து கொண்டதால், அது எவ்வளவோ குறைந்திருக்கிறது. நீ என் தோளைத் தட்டும் போதெல்லாம், அந்தத் தோளுக்கு ஒரு வலிமை கிடைத்தது. கண்களை துடைத்த போதெல்லாம் என் கண்களுக்கு பிரகாசம் கிடைத்தது." இருக்கை விளிம்பில் கையூன்றி திரிசங்கு நிலையில் நடுங்கிப் போய் நின்ற செல்வாவை ஏற இறங்கப் பார்த்த மோகனன் எனக்கு டமில் புரியாது. பத்து வரைக்கும் கான்வெட்டில் படிச்சவன் இதுக்கு பேர்தான் ஒருதலைக் காதலோ' என்றான். செல்வா, அவனை கையெடுத்துக் கும்பிடப் போனபோது, அதற்குள்ளேயே மோகனன் கடிதத்துள் மூழ்கினான். "நம் காதலுக்கு, முதலில் எங்கள் வீட்டு வேலைக்காரம்மாவிற்கு நன்றி சொல்லவேண்டும். நான் அங்கே படும் பாடுகளை அவள் உன்னிடம் சொல்லாவிட்டால் உனக்கு என்னிடம் ஈர்ப்பு ஏற்பட்டிருக்காது. அதே வேலைக்காரம்மா என் கதையை கேட்டு நீ கண்ணிர் சிந்தியதாக சொல்லாவிட்டால், பெரிய இடத்துப் பெண்ணான உன்னிடம் என் மனம் நிச்சயமாக ஈடுபட்டிருக்காது." "ஆக பலருக்கு, காதல் கண்ணிரில் முடியும். நமக்கோ, கண்ணிரில் துவங்கியது. நிச்சயமாகச் சொல்கிறேன். தற்செயலாக உனது காரில் எனக்கு நீ லிப்ட் கொடுக்காமல் இருந்தால், நான் தற்கொலை செய்திருப்பேன். அதற்காகத்தான் அந்தப் பூங்கா பக்கம் போனேன். என்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்பதுபோல் நீ பேசிய பேச்ச என் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாகிவிட்டது. நீ என் காதலிதான். கண்ணம்மா என் காதலி என்று பாரதி பாடினாரே அப்படிப்பட்ட காதலி நீ" 'உன் அறிவுரைப்படி பலர் முன்னிலையில் என்னை இழிவுபடுத்தும் சித்தியின் பிள்ளைகளாக அந்த குழந்தைகளை அனுமானிக்காமல், அண்ணன் மகனை முன்னுக்கு கொண்டு வரத் துடிக்கும் சித்தப்பாவின் அருமை செல்வங்களாக நினைத்து நினைத்து, இப்போது அவர்களை என் குழந்தைகளாக நினைக்கிறேன். இதற்கு பெருமைப்படாமல் சித்தி, பொறாமைப் படுகிறாள். ஆனாலும், அவள் என்னை ஏச வேண்டும். அதை நான் உன்னிடம் ஒப்பிக்க வேண்டும். நீ வழக்கம்போல் ஆறுதல் கூறவேண்டும் என்று என்னை அறியாமலேயே ஒரு எண்ணம் வருகிறது. சித்தியையும் அதிகமாக குறை சொல்ல முடியவில்லை. என்னை திட்டுவது போலத்தான், தான் பெற்ற குழந்தைகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/164&oldid=762221" இலிருந்து மீள்விக்கப்பட்டது