பக்கம்:ஒத்தை வீடு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 புதைமண் செல்வா, பிட்டத்தைப் பிடித்தபடியே அவள் முன்னால் நடந்தான் இடையில் வயிறு குமட்டியது. குடலே வெளியே வருவது போன்ற வாதையோடு வாந்தி எடுத்தான். வெள்ளை வெள்ளையான வாந்தி கோளையைப் போலவோ இல்லாமல், சாப்பிட்ட உணவுக் குழம்புபோல் அல்லாமல், வெள்ளை வெள்ளையாக, வெள்ளைத் திரள்போல் வெளிப்பட்ட வாந்தி. எல்லாம் முடிந்தபிறகு, அந்த அறைக்குள்ளேயே மோகனன் உடைகளை சரிப்படுத்திக் கொண்டிருந்தபோது, மோகனனின் கண் முன்னாலேயே, வாய்க்குள் விரல்விட்டு, தொண்டை வரைக்கும் விரல்களை துழவவிட்டு, மஞ்சள் பூசியது போன்ற வெள்ளை திரவத்தை வாந்தி வாந்தியாய் எடுத்தான். வாய்க்குள் விட்ட கையால் மோகனனின் வயிற்றில் குத்தியபடியே, தேவடியா மவனே. இதோடயாவது என்னை விடுடா. நீ நாசமாய் போக. கவிதா சொன்னது மாதிரி நீ ஒரு காட்டுமிராண்டி அசிங்கம் பிடிச்சவன்னு அவள் சொன்ன அர்த்தத்துக்கு இப்பதாண்டா அர்த்தம் புரியுது. ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாத ஒனக்கு தங்கைக்கும் தாரத்துக்கும் கூட வித்தியாசம் தெரியாது. அவளையாவது விட்டு வையுடா. என்னைப் போக விடுடா. புறம்போக்குப் பயலே போக்கிரி நாயே. என்று பிரமை கலைந்தும், கலைத்தும் கொதித்து கொதித்துப் பேசினான். தலைகுனிந்து நின்ற மோகனன், கதவை திறந்துவிட்டு, கட்டிலில் படுத்து விழியாடாது கிடந்தான். அப்போது செயற்கையாக வரவழைக்கப்பட்ட வாந்தி, இப்போது சித்தியின் முன்னிலையில் இயற்கையாக வந்தது. குடலைக் கழுவி விட்டதுபோல் உணவுக் கூழ்களையும், கத்தரிக்காய் துண்டுகளையும் வெளியே கொட்டியது. அவனுக்கு உடனே, அம்மாவின் ஞாபகம் வந்தது. கிராமத்தில் ஒரு தடவை மஞ்சள் மஞ்சளாய் அவன் பிந்த வாந்தி எடுத்தபோது, அம்மா, இவன் தலையை பிடித்துக் கொண்டாள். முகத்தை நிமிர்த்தி, அதில் படிந்த வாந்தியை தனது'முத்தானையால் துடைத்துக் கொண்டு தோளுக்கு மேலே போன தன் பிள்ளையை, தனது தோளில் சாய்த்துக் கொண்டாள் அப்பா ஒடோடி வந்து துடித்துப் போய் நின்றார். அக்காக்கள் அவன் கரங்களை ஆளுக்கு ஒன்றாய் பிடித்துக் கொண்டு அவனை சோகத்தோடு பார்த்தார்கள். பெரிய அக்கா அவன் கலைந்து போன சட்டையை சரிப்படுத்தினாள் சின்னக்கா, அவன் வாயை துடைத்து விட்டாள். இப்படி அவன் நினைத்துக் கொண்டிருந்த போது, சித்திக்காரி அவன் வாந்திக்கு நேர்முக வர்ணனை கொடுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/170&oldid=762228" இலிருந்து மீள்விக்கப்பட்டது