சு. சமுத்திரம்
187
அரைகுறை ஆங்கிலத்திலும், அவரைச் சூழ்ந்து நின்ற கேய் பையன்களுக்கு தமிழிலும் பேசினான். உடனே, துணைச் செயலாளர் வெள்ளைக்காரரிடமும், இந்தப் பையனிடமும் மாறி மாறிப் பேசினார். வாசகர்களின் வசதிக்காக தமிழாக்கம் செய்யப்படுகிறது.
“இவன் உங்களுக்கு பயன்படக்கூடாது என்பதற்காக, தன்னோட தங்கையை கட்டிக்கப்போறதாய், மோக், அப்போ சொன்னது நினைவிருக்குதா பாஸ்.”
“ஏஸ்... புரசீட்...”
“அதாவது, இவனை அவன் மட்டுமே கீப் செய்யணுமுன்னு நினைக்கிறான். ஒரு அறைக்குள்ள தங்கும்படி இவனுக்கு எச்சரிக்கை செய்தான். உங்க பணத்தை வாங்கிக்கிட்டு உங்களுக்கே துரோகம் பண்றான்.”
“தட்ஸ் ஆல் ரைட்... ஹீ வில் பே பார் இட்... (பரவாயில்லை. அதற்கான பலனை அனுபவிப்பான்)”
வெள்ளைக்காரர் உடம்பைச் சொறிந்து கொண்டே, தூணோடு தூணாய் ஒடுங்கிக் கிடந்த செல்வாவை உற்றுப் பார்த்தார். “பயல், கேய் கேம்முக்கு புதுசு... இந்த மாதிரி ‘கன்றிவுட் பாயை’ விடவே முடியாது. சோதா பயல்களோட சோரம் போனது போதும்.”
என்றாலும், மிஸ்டர் ஜான் ஜோ, நாலுந்தெரிந்தவர். கிளப்பின் துணைச் செயலாளரான சத்ருக்கன் பொருள்பட பார்த்தார். அவன், அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தான். விட்டுப் பிடிக்க வேண்டிய கிராக்கியாம்.
செல்வாவின் அருகே, அவனுக்குத் தெரியாமல் ஒரு முரடனை நிறுத்திவிட்டு அவர்கள் மேடைக்குப் போய் விட்டார்கள். உடனே ‘ஆடல் பாடல்', அம்மண அமர்க்களங்கள். நமக்கு மறுவாழ்வு அளிக்கும் மிஸ்டர் ஜோ என்று துணைச் செயலாளர் சத்ருக்கன் ஓங்கிக் கத்த, மேடையில் நின்றவர்களும், தளத்தில் கிடந்தவர்களும் “வாழ்க வாழ்கவே” என்றார்கள். பிறகு ஒரு பாடல்
“இருப்பது கொஞ்ச காலம் — அதுவே
கொஞ்சும் காலமாகட்டும்.
இறப்பது நிச்சயம் — அதனால்
இருப்பதைப் பகிர்வோம்.
ஆணென்ன பெண்ணென்ன
அனுபவ இன்பமே முக்கியம்.”
இந்தப் பல்லவி, தான் எழுதியது என்றும், அதன் பொருளையும் சத்ருக்கன், ஜோவிடம் விளக்கிக் கொண்டிருந்தான். பல பேர்