பக்கம்:ஒத்தை வீடு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 புதைமண் "அப்படின்னா." "ஒன்னை, அந்த சொரிப்பயல் வெள்ளையனிடமிருந்து நான் காப்பாற்ற முயற்சி எடுத்ததை, அவனுக்கு எவனோ போட்டு கொடுத்துட்டான். நேற்று நள்ளிரவிலிருந்தே, என் வேலை போயிட்டுது. பதவி போயிட்டுது. ஆயிரக் கணக்கில டாலர் போயிட்டுது. ஆனால், இதுவும் நன்மைக்குத்தான். நேற்றே என் பேர்ல ஒரு லெட்டர் இங்கே கிடந்தது. எங்களுக்குன்னு பம்பாயில ஒரு சங்கம் இருக்குது. ஒரு பத்திரிகையும் வெளி வருது. இப்போ இந்த சங்கத்தை அகில இந்திய சங்கமாய் ஆக்கப் போறோம். இதுக்கு என்னை பொதுச் செயலாளரா போட்டிருக்காங்க. ஒவ்வொரு மாநிலமும் சுற்றலாம். சங்கத்தின் வளர்ச்சிக்காக என்னோட நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கும். யார் கண்டா? நான் ஒருவேளை அகில இந்திய வி.ஐ.பி.யாக்கூட ஆகலாம். இல்லன்னா தெருவோர லோலாயியாகவும் திரியலாம்." "இங்கே வருவதாய் இருந்தால், குறைந்தது ஐந்து வருஷம் ஆகும். அதுவும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் என்கிற செய்தி வந்தபிறகுதான் வருவேன். ஒரே ஒருநாள் உங்களுக்குத் தெரியாமலே தலை காட்டிட்டு ஒடிப் போயிடுவேன். சரி. மைடியர் பிரதர் இன் லா. கவிதாவை கை விட்டுடாதேடா. ரொம்பவும் ரோசக்காரி... எவ்வளவுக்கு எவ்வளவு ரோசம் உண்டோ... அவ்வளவுக்கு அவ்வளவு பாசம் உள்ளவள். என்னை அவள் உன்கிட்ட திட்டுனதுகூட பாசத்தின் வெளிப்பாடுதான். எனக்காக அவள் அழுதுயிருக்கிற கண்ணிர் ஆயுள் முழுதுக்கும் போதும். சரி கெட் அவுட் ப்ளீஸ்..." "பாவம். என்னால நீங்க போறத நெனத்தால். மனசுக்கு கஷ்டமா இருக்குது ஸார்." "யாருடா ஸார்." “ஸாரி. ஏன் மச்சான். நீங்க இங்கேயே இருக்கப்படாதா? ஏன் பம்பாய்க்கு ஒடுறே." "ஒங்களுக்காக மட்டும் ஒடலடா., டூப்ளிகேட் அம்மாவுக்காக. ஒரிஜினல் அப்பனுக்காக... என் பிழைப்புக்காக... ஒரினச் சேர்க்கைக்காரர்களை உதாசீனப்படுத்தும் இந்த தமிழ்நாட்டுக்காக. கர்ணனை எப்படி அர்ச்சுனன் தன்னந்தனியா கொல்லலியே. அப்படி, ஒன்னாலயோ கவிதாவாலயோ மட்டும் நான் ஒடலே. அதனால என்னை தியாகியாய் ஆக்கிவிடாதே." செல்வா, மோகனனின் கைகளை பற்றியபடியே ஏதோ ஒரு வாசனையை உணர்ந்தான். அது வந்த மேற்கு திசையை நோக்கினான். சன் மைக்கா மேசையில் செண்பக, ஆரஞ்ச், பைன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/200&oldid=762261" இலிருந்து மீள்விக்கப்பட்டது