பக்கம்:ஒத்தை வீடு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 புதைமண் போக வேண்டும், முக்கால் மணிநேரம் வேர்வையே குளியலாகும் வகையில் நடக்க வேண்டும். இனிமேல் எந்த பிரச்சினையும் வராது. அப்படி வந்தால், நீங்களும் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் வரலாம். ஒகே." டாக்டர். சத்தியா, இருக்கையை விட்டு எழுந்ததால், அட்டை மாதிரி ஒட்டிக் கிடந்த செல்வா எழுந்தான். எழுந்தபடியே நடந்தான். /9 கடந்த ஒருமாத காலமாக புதை மண்ணாய் தெரிந்த கடல்மண், அவர்கள் இருவருக்கும் மாலை மஞ்சள் வெயிலில் ஒளி சிந்தும் மரகதத் துகள்களாக தெரிந்தன. கடல் வெள்ளை வெள்ளையான அலைப் பற்களைக் காட்டிக் காட்டி சிரித்தது. முன் எச்சரிக்கையாக வெளிச்சம் பொங்கும் இடத்திலேயே அமர்ந்தார்கள். கைகளை மட்டும் பிடித்துக்கொண்டார்கள். கடற்கரையில் சந்திக்கக்கூடாது என்று, இருவருக்கும் குடும்பத்தினர் விதித்த கட்டளைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, மாதம் ஒரு தடவை சந்திப்பது என்று இவர்களாகவே முடிவெடுத்துக் கொண்டார்கள். மற்ற நாட்களில், இவன் சித்தப்பா, சித்தி அங்கே போவதும், அவள் அம்மா, அம்மா இவர்கள் வீட்டுக்கு வருவதும் வழக்கமாகி விட்டது. இருவரும் எதிர்காலத் தம்பதியினர் என்ற எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று, இரண்டு குடும்பத்துக்கும் இடையே உறுதியாகி விட்டது. "கவிதா, நான் ஒரு கவிதை எழுதி வந்திருக்கிறேன். படித்துக் காட்டட்டுமா?" "அய்யய்யோ இந்த கவிதையால வந்த வினையே போதும்பா. நீங்க படிச்சது போதும். கிழிந்து எறிங்க. அதோட எனக்கு இந்த கவிஞர்களோட கற்பனையே பிடிக்காது. பூ காதலியாம், வண்டு காதலனாம். இது அபத்தமான கற்பனை. மலருக்கும் மலருக்கும் மகரந்த உறவை ஏற்படுத்தும் வண்டுகள் வெறும் புரோக்கர்கள்தான். காதலன்கள் அல்ல.” "அல்லவோ. இல்லவோ. இது வேற மாதிரியான கவிதை கவிதா உன்ன மாதிரி வித்தியாசமான கவிதை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/244&oldid=762309" இலிருந்து மீள்விக்கப்பட்டது