பக்கம்:ஒத்தை வீடு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஒத்தை வீடு இல்லை. அதன் சாதாரணத் தோற்றம், அவனை ஈர்த்தது. டை கட்டாத சித்த வைத்தியர். ஸ்டெதாஸ் கோப்பைக் கூடக் காண வில்லை. இப்படிப்பட்ட மனிதர்களிடம் தான் விஷயம் இருக்கும். இருக்குதோ இல்லையோ. இதுவே கடைசி முயற்சி. இதுவும் பலனளிக்கவில்லையானால், இருக்கவே இருக்குது விஷம். ரயில்வே தண்டவாளம். தேசிய சாலையின் நடுப்பக்கம். மனோகர் வாழ நினைத்தவனாய் நடக்காமல், சாகத் துணிந்தவனாய், அந்த அறையை நெருங்கினான். மூன்று படிகளையும் ஒரே படியாய் அனுமானித்து, ஒரே தாவாய்த் தாவினான். பத்தாம் பசலி நாற்காலியில் முதுகைக் கிடத்தாமல், நிமிர்ந்திருந்த தோற்றத்தைப் பார்த்து, பரவசப்பட்டான். சதுர முகம். சதுராடும் பார்வை. தினவெடுத்த தோள்கள். இவ்வளவுக்கும் அவருக்கு, வயது எழுபது இருக்கலாம். வைத்தியர் ஜெகன்னாதன், அவனை உட்காரச் சொன்னார். அவனை சாமுத்திரிகா லட்சணங்களால் அளவெடுப்பதுபோல், அவன் மூக்கைப் பார்த்தார். வாய்க்கு மேலுள்ள மச்சத்தைப் பார்த்தார். கால்கள், தரையில் கோலம் போடுகின்றனவா என்று கீழ்நோக்கிப் பார்த்தார். பிறகு இயல்பாகப் பேசினார். "எனக்கு காது கொஞ்சம் மந்தம். உரக்கப் பேசணும். ஏன் அப்படி மிரண்டு பார்க்கிங்க.. கர்ப்பப்பை இல்லாட்டாலும் கர்ப்பிணி ஆகலாம். எய்ட்ஸ் நோயை இப்பவே ஒழிக்கலாம். வழுக்கைத் தலையை பசுஞ்சோலை ஆக்கலாமுன்னு பேப்பர்ல படங்கள் வருதே. கருப்புத் துரைகள். அவங்க மாதிரி நான் இல்யேன்னு ஆச்சரியப்படுகிறீங்களா.. ஸ்டெதாஸ் கோப்பை துரக்குக் கயிறாய் கழுத்துல தொங்கப் போட்டு, புன்னகை பூக்கிறாங்களே. அவங்க வேறு. நான் வேறு. இவங்க சித்த வைத்தியர்கள் இல்ல. செத்த வைத்தியர்கள். அந்தப் பெரியவர், பேச்சை நிறுத்திவிட்டு, மனோகரின் காதுகளில், தன் பேச்சு ஏறுகிறதா என்பதுமாதிரி, மூக்கும் வாயும் முன்துருத்த உற்றுப் பார்த்தார். அவன் காட்டிய ஆவலில், பேச்சை தொடர்ந்தார். ஆனால், என்னை மாதிரி விரல்விட்டு எண்ணக்கூடிய அந்தக்காலத்து வைத்தியர்கள் இன்றும் உயிரோடதான் இருக்கோம். சித்தத்தை சிவனிடம் செலுத்தி, யோகம், ஞானம், மருத்துவம், மந்திரம், யந்திரம், தந்திரம் என்ற அப்பியாசங்களுக்கு அதிபதிகளான நந்தீசர், மூலதீசர், அகத்தீசர், சட்டநாதர், கிடைக்காடர், சண்டிகேசர், கனராமர், போகர், சிவவாக்கியர், பேரக்கர், புன்னாக்கீசர், மச்சமுனி, பூன்னக்கண்ணர், யூகமுனி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/47&oldid=762339" இலிருந்து மீள்விக்கப்பட்டது