பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தான் பிறந்த ஊர் 41 ஞா. அவன் நிரம்ப குணசாலியாயிருந்தபோதிலும், மிகுந்த தைரியமும் வீரமும் வாய்ந்தவன்; ஆகவே, கடைசி யுத் தம் வந்தபொழுது, கப்பல் படையைச் சேர்ந்து, யவ னர்களுடனும் சுவர்ண பூமியார்களுடனும் சண்டை போட வேண்டுமென்று, புறப்பட்டுப் போய்விட்டான். நாங்கள் எவ்வளவு தடுத்தும் பிரயோஜனப்படாதபடி, அதற்கப்புறம் அவன் செய்தி நாங்கள் ஒன்றும் கேள் விப்படவில்லை இதுவரையில். - மா. உம்!-அவன் இறந்து போயாவது இருக்கவேண்டும். அல்லது யுத்தத்தில் மடிந்தாவது இருக்கவேண்டும்ஏனென்ருல், அவன் இந்நாட்டில் உயிரோடிருந்தால், எப்படியாவது இதுவரையில், அவன் எங்களைக் கூப்பிடு கிற வழக்கப்படி-தன் அப்பாவும் அம்மாவுமானஎங்களைப் பார்க்க வந்திருப்பான். அவன் என்னவாயி ஞனே வென்று எத்தனே ராத்திரி நான் கவலைப்பட்டு துரக்கம் வராமல் கஷ்டப்பட்டேன். (கண்ணிரைத் துடைத்துக் கொள்கிருள்.) ஹ. பரமநாதனிடம் ஒருபுறமாக) இனி என்னல் பொறுக்கமுடி 'யாது. - - ப. (அவனிடம் ஒருபுறமாக) கொஞ்சம் பொறுத்துக்கொள் ளுங்கள் இன்னும்-ஐயா, நீங்களிருவரும் எங்களுக்குக் காட்டிய அன்பிற்காக, உங்களுக்கு சந்தோஷத்தைத் தரத்தக்க ஒரு சமாசாரம் சொல்கிறேன்-இந்த ஹரி பக்த வம்சத்திலுதித்த, கடைசி பிள்ளை - ஹரிபக்தனே. அவனே ஹரி, என்று சுருக்கிக் கூப்பிடுவார்கள் மா. ஆம் ஆம் அதுதான் அவன் பெயர்-என் சின்ன ஹரி!அவனைப்பற்றி என்ன சமாசாரம் ஐயா?-அவன் உயி ரோடிருக்கிருன? ; : « ஞா. அந்த பெரிய மனுஷ்யர் பேசட்டும் மாரி. ப. ஹரிபக்தர் உயிருடனிருக்கிருர். இப்போது ராஜாங்கத் தில் கடற்படையில் உத்தியோகம் செய்கிருர்-அவரை விட சிறந்த போர்வீரன் அப்படையிலே கிடையாது. - ஞா. நீங்கள் எங்களுக்கு வேடிக்கையாகச் சொல்கிறீர்களா என்ன?

  • -6