பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

பதினுேராக் கிருமுறை என்ற பெயரே சைவத் கிருமுறை களைக் கோவை செய்து வரிசைப்படுத்தி அமைத்த செயலைக் குறிப்பிக்கிறது. இதற்கு முன் பத்துத் திருமுறைகள் உள்ளன என் ப்தை இப்பெயர் அறிவிக்கிறதல்லவா? நம்பியாண்டார் நம்பிகள், பதினுெரு திருமுறைகளைத் தொகுத்தார். பதினேராங் திருமுறை யில் ஆலவாயுடையார் அருளிச் செய்த கிருமுகப் பாசுரத்தை முதலில் வைத்துப் பட்டினத்துப் பிள்ளையார் இயற்றிய கிருவொற்றி யூர் ஒருபா ஒருபக்தை இறுதியாக வைத்து 31 பிரபந்தங்களேத் தொகுத்தார். பிறகு அரசன் வேண்டுகோளின்படி நம்பியாண் டார் நம்பி இயற்றிய பத்துப் பிரபந்தங்களையும் பிறர் சேர்த்தனர். இத்திருமுறையில் பன்னிரண்டு அருளாளர்கள் பாடிய 41 நூல்கள் இருக்கின்றன. 1888 பாடல்கள் இப்போது கிடைக் கின்றன. சில நூல்களிற் சில பாடல்கள் கிடைக்கவில்லே. இந்த நூல்களே இயற்றிய திருவருட் செல்வர்கள் திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நரயனுர், சேர மான் பெருமாள் நாயனுர், நக்கீர தேவர், கல்லாடனர், கபில் தேவர், பாணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி என்போர்.

இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரையில் எழுந்தருளி யிருக்கும் இறைவர் என்றும், அப்பெருமான் பாணபத்திாருக் காகச் சேரமான் பெருமாள் நாயகுருக்குப் பாசுரவடிவில் ஒரு திருமுகத்தை வரைந்து அளித்தாரென்றும், அதுவே கிருமுகப் பாசுரமென்ற பாடலென்றும் கிருவிளையாடற் புராணம் கூறு கிறது. பதினுேராக் கிருமுறையின் தொடக்கத்தில் உள்ள அது வருமாறு :

மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பால் நிற வரிச்சிறகு அன்னம் பயில்பொழில் ஆல வாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் 5. பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு

உரிமையின் உரிமையின் உதவி ஒளி திகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க : பண்பால் யாழ் பயில் பான பத்திரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/5&oldid=548421" இலிருந்து மீள்விக்கப்பட்டது