பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிநூல் நெறிமுறைகள்

௨௫

மாய் இருந்தது” என்று, கிறிஸ்தவ மறையில் ஆதியாகமம் 11ஆம் அதிகாரம் முதற் கிளவியில் கூறப்பட்டுள்ளது.

இன்றும், ஒரு உலக மூலமொழியைத் தேற்றஞ் செய்வதற்கான பல சான்றுகள் உள்ளன. அவையாவன:—

(1) மக்கள் தொகை வரவர மிகுதல்.

(2) எல்லாமொழிகளின் அரிவரியும் அ ஆவில் தொடங்கல்.

(3) அம்மா, அப்பா என்னும் பெயர்களும், மூவிடப் பெயர் வினாப்பெயர் வேர்களும், பல சொற்களும் பல மொழிகட்கும் பொதுவாயிருத்தல்.

(4) எண்கள் பத்துப்பத்தாகவே பல நாடுகளில் எண்ணப் படல்.

(5) நெருப்பு, சூரியன், நாகம் முதலியவற்றின் வழிபாடு பண்டை யுலகெங்கு மிருந்தமை.

(6) நெட்டிடையிட்ட நாட்டார்க்கும் கருத்தொருமிப்பு.

கா :ஆங்கிலம் தமிழ்

tonic(from tone)ஒலித்தல் (தழைத்தல்)

to catch fireதீப்பற்று

to fall in love   வீழ்(“தாம்வீழ்வார்....உலகு”)

blacksmith கருமான்

முதலாவது கணவனும் மனைவியுமாக இல்லறந் தொடங்கும் இருவர், பின்பு பெரிய குடும்பமாகப் பெருகுவதையும், நாளடைவில் சிற்றூர் நகரும் நகர் மாநகருமாவதையும், குடி மதிப்பறிக்கைகளில் வரவர மக்கட்டொகை மிகுந்து வருவதையும் காண்பார்க்கு, மக்கள் எல்லாம் ஒருதாய் வயிற்றினர் என்பது புலனாகாமாற் போகாது. மக்கள் ஒருதாய் வயிற்றினராயின், அவர்கள் பேசும் பல்வேறு மொழிகளும் ஒரு மூலத்தினவாதல் வேண்டும்.

மக்கள்தொகை வளர்ச்சிக்குக் காட்டாக, மாக்கசு முல்லரின் மொழிநூற் கட்டுரைகளின் முதன் மடலத்தில், 62ஆம் பக்க அடிக்குறிப்பிற் காட்டியுள்ள ஒரு குறிப்பை இங்குக் கூறுகின்றேன்.