பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௬

ஒப்பியன் மொழிநூல்

கொள் கைக்குத் துணை செய்கின்றன.......... இலங்கை சிறிது சிறிதாய்க் கடலுண் மூழ்கிக் குறுகியது என்று பௌத்தர் எழுதிவைத்த இடவழக்குச் செய்தியோடும் இது ஒத்திருக் கின்றது.

இராமர் காலத்தில், இலங்கை இப்போதிருப்பதை விடப்பெரிதாயும், தமிழ் நாட்டிற்கு மிக நெருங்கியதாயுமிருந்தது. இவ்விரு நிலங்கட்கும் இடைப்பட்ட கடல், ஒருவர் நீந்திக்கடக்குமளவு இடுகிய கால்வாயாக வேயிருந்தது.அநுமன் குமரி (மகேந்திர) மலையினின்று கடல்தாண்டியதும், இராமர் வானரப்படைத் துணையால் அணைகட்டியதுமான இடம், இப்போது இந்துமா கடலில் உள்ளது. இப்போது இராமர் அணைக்கட்டு என்று வழங்குமிடம், பிற்காலத்தில் பரிந்தை (Current) யாலும் எரிமலைக் கொதிப்பாலும், புயலாலும் இயற்கையாய் அமைந்த கல்லணையாகும். தமிழ் நாட்டின் தென்பகுதி கடலுண் முழுகி, இலங்கை மிக விலகிப் போனபின், சரித்திர மறியாத மக்களால், அது இராமாயணக் கதையொட்டி இராமர் அணைக்கட்டெனப்பட்டது. 'ஆதாம் வாரைவதி' (Adam's Bridge) என்னும் பெயர் அதற்கு எவ்வளவு பொருந்துமோ, அவ்வளவே 'இராமர் அணைக்கட்டு' என்னும் பெயரும் பொருந்துவதாகும். இதை,

அநுமன் குமரி (மகேந்திர) மலையினின்று கடல் தாண்டினானென்றும், வானர வயவர் குட (மேற்குத் தொடர்ச்சி) மலை வழியாகத் தெற்கே சென்றனரென்றும்,கற்களைக் குவித்தே கடலில் அணைகட்டினரென்றும்,இராமர் பொதிய மலையிலிருந்த அகத்தியரிடம் வில் பெற்றன ரென்றும், இராமாயணங் கூறுவதாலும்;

“துங்கமலி பொதித்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்தி
லங்கனக விலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம்”

என்று சிவதருமோத்திரங் கூறுவதாலும்;

இலங்கையின் பழங்குடிகள் அதன் தென்பாகத்தி லேயே இன்று வதிவதாலும் அறியப்படும்

குமரிநாட்டுக் கடல்கோள்கள்

“உலகத்திலே, இன்றுவரை நேர்ந்துள்ள கடற் பெரு வெள்ளங்களுள், முதன்மையானது பதினூறாயிரம் ஆண்டு


Manual of the Administration of the madras

presidency vol.I.p.4