பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௮

ஒப்பியன் மொழி நூல்

ஒரு பெருநிலப் பரப்பின் அழிவாயும் அதன் கதை உலக முழுதும் வழங்குவதாயும், மக்கள் ஒருதாய் வயிற்றினரென் றும் மாந்தன் பிறந்தகம் குமரிநாடென்றும் துணிவதற்குச் சான்றாயுமுள்ளன.

இம் முதற் கடல்கோளே நோவாவின் காலத்தில் நிகழ்ந்த வெள்ளமாகக் கிறித்தவ மறையிற் கூறப்படுவது. இது 'வெள்ளப் பழமை' (The Flood Legend) என்று ஆங்கிலத் தில் வழங்கும்.

“மேனாட்டார் இக் கதையை யூதரிடத்தினின்று, பழைய ஏற்பாட்டு வாயிலாய்த்தான் அறிந்தார்கள். ஆனாலும்,இது யூதரிடத்து முதன்முதல் தோன்ற வில்லை.யூதர் இக்கதையைப் பாபிலோனியரிட மிருந்தறிந்தார்கள்.ஆனால், கில்கமேஷ் (Gilgamesh) என்னும் பாபிலோனியக் காதை நூலில் இது இணைக்கப்பட்டிருக்கிற முறையை நோக்கும் போது,இது பிற்காலச் செருக லென்றும், பாபிலோனியருக்கு மிக முற்பட்ட தென்றும் கருத இடமுண்டு.”

வெள்ளக்கதை பாபிலோனில், அல்லது சேமிய வரணத் தாருக்குள் மட்டும் காணப்படுவதன்று, அதற்கு மாறாக, அது உலக விரிவானது. யூதர் நோவாவொருவ னையே எஞ்சினோனாகக் கொண்டனர்; பாபிலோனியர் உத்தானபிஷ்திம் (Utanapishtim) என்பவனைக் கொண்டனர். கிரேக்கருக்குள், தியூக்கேலியனையும் (Deucalion) அவன் மனைவி பைரா (Pyrrha)வையுங் காண்கின்றோம். மெக்ஸி கோவில், இருவேறு வரலாறுகள் உள. அவற்றுள் முந்தின நகுவாத்தல் (Nahuatl) கதை காக்ஸ் காக்ஸை (Cox cox)யும் அவன் மனைவி சொச்சிக்கு வெத்ஸலை (Xochliquetzal)யும் கூறுகின்றது; இன்னொன்று இவ்விருவரையும், முறையே, நத்தா (Nata) நானா (Nana) என்று கூறுகின்றது.

“இதோடு பெயர்வரிசை முடியவில்லை. உண்மையில் எல்லா மக்களுக்கும் இவ் வெள்ளத்தைப்பற்றி ஒவ்வொரு கதையிருப்பதாகத் தெரிகிறது.”*

சீனப் பழமையில் ப்வோகி (Fohi)யும், கல்தேயப் பழமை யில் சிசுத்துருசும் (Xisuthrus) நோவாவாகக் கூறப்படுகின்றனர்.


  • The illustrated weekly of india Aug 6 1939 p.73