பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமரி நாட்டுக் கடல்கோள்கள்

௫௧

படுத்திக் கொண்டு, வட இந்தியாவை நல்வினை நிலம் (புண்ணிய பூமி) என்றும், தென்னிந்தியாவைத் தீவினை நிலம் (பாவ பூமி) என்றும் கூறியதாகத் தெரிகின்றது. தமிழர் திசை களை நல்லதும் தீயதுமாகக் கொண்டாரேயன்றி இடங்களை யல்ல. திபேத்தை நோக்க, வட இந்தியா தீயதும், தென்துரு வத்தை நோக்க தென் இந்தியா நல்லதுமாதல் காண்க.

திசைபற்றிய ஆரியக் கொள்கையைக் கண்டிக்கவே,

“எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா
தென்னாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை வடதிசையுங்
கொன்னாளர் சாலப் பலர்”.

என்னும் நாலடிச் செய்யுள் எழுந்ததாகத் தெரிகின்றது.

சிவன் அல்லது முருகன் குறிஞ்சித் தெய்வமாதலின், தெற்கே குமரிமலையமிழ்ந்து போனபின், பனிமலையைச் சிவபெருமானின் சிறந்த இருக்கையாகக் கொண்டனர் தமிழர். (இதையும் ஆரியர் சிவபெருமானை ஆரியத் தெய்வமாகக் கூறுவதற்குப் பயன் படுத்திக்கொண்டனர்.)

“பஃறுளி.... வாழி” என்னும் சிலப்பதிகாரப் பகுதியை நோக்குக.

புதுச்சேரிக்கு மேற்கே ஒரு காததூரத்திலுள்ள பாகூர்ப் பாறையில், பாகூருக்குக் கிழக்கே கடல் நான்கு காதம்..... எனக் கல்வெட்டிருக்கின்றதெனவும், இப்பொழுது அப் பாகூருக்குக் கிழக்கே கடல் ஒரு காத தூரத்திலிருக் கின்றதெனவும் கூறுவர். இதனால் மூன்று காதம் கடல்கோள் நிகழ்ந்துள்ளதென்பது புலனாம்”[1] என்று கார்த்திகேய முதலியாரும்,

“இப்போது கன்னியாகுமரி முனையில் மூன்று கோயில்கள் உள்ளன. ஒன்று முற்றிலும் அழிந்துகிடக்கின்றது. அது நாள்தோறும் கடலில் முழுகிக்கொண்டே வருகின்றது” என்று S.V. தாமசும் (Thomas) கூறியிருப்பதினின்று, குமரியாறு மூழ்கின பின்னும் தமிழ்நாடு குறுகி வந்திருப்பதையறியலாம்.

சீகாழி ஒருமுறை வெள்ளத்தாற் சூழப்பட்டமை; தோணிபுரம் என்னும் அதன் பெயரால் விளங்கும்.


  1. 1.மொழிநூல்,பக்.14.