பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫௨

ஒப்பியன் மொழிநூல்

குமரிநாடு - புறச்சான்றுகள்

(1) வியன்புலவர் எக்கேல் :

“உயிர்களின் 'பெயர்வும் பிரிந்தீடும்'பற்றிய அதிகாரத்தில், ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும்போது, எக்கேல் “இந்துமாக் கடல் ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய், ஆப்பிரிக்காவின் கீழ்கரை மட்டும் படர்ந்திருந்த ஒரு நிலப்பரப்பாயிருந்தது. ஸ்கிளேற்றர் இப்பழம் பெருங்கண்டத்தை, அதில் வதிந்த குரங்கொத்த உயிரி (பிராணி) பற்றி லெமுரியா என்ற ழைக்கிறார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமாயிருந்திருக்கக் கூடுமாதலின், மிக முக்கியமானது. காலக்கணித உண்மைகளைக் கொண்டு, இப்போதை மலேயத் தீவுக் கூட்டம், முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்ட தென்று, உவாலேஸ் கூறியுள்ள முக்கியச் சான்று, விதப்பாய் உவகையூட்டத்தக்கது. போர்ணியோ, ஜாவா, சுமத்திரா என்னும் பெருந்தீவுகளைக்கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ-மலேயத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால், ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை, சற்று முந்திக்கூறிய லெமுரியக் கண்டத்தோடும் அது இணைக்கப் பட்டிருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிஸ், மொலுக்காஸ், புதுக்கினியா, சாலோமோன் தீவுகள் முதலியவற்றைக்கொண்ட கீழைப்பிரிவாகிய ஆஸ்திரே-மலேயத் தீவுக்கூட்டம், முன் காலத்தில் ஆஸ்திரேலியாவோடு நேரே யிணைக்கப்பட்டிருந்தது”[1] என்று கூறுகின்றார்.

(2) திருவாளர் ஓல்டுகாம்

“செடிகொடிகளிலும், உயிரி(பிராணி)களிலும், ஆப்பிரிக் காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலிருந்த மிகநெருங்கிய ஒப்புமைகளைக் கொண்டு திருவாளர் ஓல்டுகாம், ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்ததென்று முடிவு செய்கிறார்.”[2]

“இந்துக்கட்குப் பேரே தெரியாத சில பழைய காலத்துப் பெருமகமையான பப்பரப்புளி, அல்லது யானைப்புளி, அல்லது சீமைப்புளி (Baobab or Adansonia Digitata) என்னும்


  1. 1.Castes and Tribes of Southern India Vol I,pp.29,21.
  2. 2.Castes and Tribes of Southern India Vol I,p.24.