பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்

௪க

தலைவனுக்கும் முறையே சாரல், சாரனாடன் என்னும் பெயர் கள் தொகைநூல்களிற் பயின்றுவருகின்றன. சார் என்னுஞ் சொல் சேர் என்றானாற் போல, சாரல் என்னுஞ் சொல்லுஞ் சேரல் என்றாகும். சேரநாடு குடமலையின் இருமருங்குமுள்ள சாரலாதலின், அதையாளும் சேரன் சேரல் எனப்பட்டான். இது இடவாகுபெயர்.

சேரல் - சேரன். சேரல் - சேரலன் - கேரளன்.
ல்-ன், போலி. கா: உடல்-உடன், வெல்-வென்.
ச-க, போலி. கா:சீர்த்தி-கீர்த்தி, செய் (தெ.)-(சை)-கை.
ல-ள, போலி. கா: செதில்-செதிள், மங்கலம்-மங்களம்.

தமிழ்மொழியின் பழைமை

தமிழ்மொழி அசைநிலை முதலிய ஐவகை நிலைகளை யடைந்துள்ளமையாலும், நகை, வளை முதலிய தற்காலப் பகுதிகள் முற்காலத்துத் தொழிற் பெயரா யிருந்தமையாலும்,சிவன், முருகன் முதலிய தெய்வங்களைத் தலைக் கழகவுறுப் பினராய்க் கூறியிருத்தலாலும், சிவனே தமிழை உண்டுபண் ணினார் என்னுங் கூற்றாலும் தமிழின் பழைமையை யறியலாம்.

தமிழ்நூல்களின் பழைமை

தொல்காப்பியர்

பெயர் - தொல்காப்பியரின் இயற்பெயர் திரண தூமாக் கினியென்று சொல்லப்படுவதால், தொல்காப்பியர் என்னும் பெயர் சிறப்புப்பெயரே யாகும். இப்பெயருக்குப் பழைமையான காவிய மரபைச் சேர்ந்தவரென்று பொருள் கூறப்படு கின்றது. தொல்காப்பியர் கவியென்ற முனிவரின் மரபின ராயின், காவியர் அல்லது காப்பியர் என்றழைக்கப்படுதல் இயல்பே. ஆனால், பல்காப்பியர் என்று இன்னொரு புலவர் பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டி லிருந்தனர். தொல்காப்பியர் என்னும் பெயருக்குப் பழைமையான காவிய மரபினர் என்னும் பொருள் பொருந்துமாயினும், பல்காப்பியர் என்னும் பெயருக்குப் பல காவிய மரபினர் என்று பொருள் கூறல் பொருந்தாது. ஆகவே, காப்பியர் என்னும் பெயருக்கு வேறொரு பொருளிருத்தல் வேண்டும்.