பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬௬

ஒப்பியன் மொழிநூல்

குயிர்முதலா வந்தணையு மெய்ப்புணர்ச்சி யின்றி
மயலணையு மென்றதனை மாற்று”

“இதை விரித்துரைத்து விதியும் அறிந்துகொள்க” என்பது நன்னூல் மயிலைநாதருரை (நன். எழு. 51)

(3) “வகரக் கிளவி நான்மொழி யீற்றது”

(தொல். மொழி. 48)

அவ், இவ், உவ், எவ், தெவ், என வகரமெய் யீற்றுச் சொற்கள் ஐந்தாதல் காண்க.

(4)“மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப
புகரறக் கிளந்த அஃறிணை மேன”<poem>

(தொல். மொழி. 49)


என்று எகின், செகின், எயின், வயின், குயின், அழன், புழன், புலான், கடான் என வரும் ஒன்பதும் மயங்காதன வெனக் கொள்ளின், பலியன், வலியன், வயான், கயான், அலவன், கலவன், கலுழன்,மறையன், செகிலன் முதலாயின மயங்கப் பெறாவென மறுக்க” என்பது நன்னூல் (எழு. 67) மயிலைநாதருரை.

<poem>(5)“ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒன்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகரம் ஆகும்”

(தொல். குற். 40)

ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது. தொண்டு + பத்து = தொண்பது - தொன்பது - ஒன்பது. தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொண்பது என்பதை ஒப்பு நோக்குக.

தொண்ணூறு என்னும் பெயர், முதலாவது, 900 என்னும் எண்ணைக் குறித்தது, தொண்டு + நூறு = தொண்ணூறு. இதை அறுநூறு, எழுநூறு, எண்ணூறு என்னும், பிற மூன்றாம் இட எண்ணுப் பெயர்களுடன் ஒப்புநோக்குக.

தொள்ளாயிரம் அல்லது தொளாயிரம் என்பது, முதலாவது, 9000 என்னும் எண்ணைக் குறித்தது. தொண்டு