பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஉ

ஒப்பியன் மொழி நூல்

8) ”ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே”

(தொல். மொழி. 39)

இதில், நொ என்பது பகுதியாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நோ என்பதே பகுதியாகும். நொ என்பது அதன் குறுக்கமே.

ஏவல் இ.கா. நி.கா எ.கா. பெயர்
நோ நொந்தான் நோகிறான் நோவான் நோய்
காண் கண்டான் காண்கிறான் காண்பான் காட்சி

நோ என்பது ஏவல் வினையாகும்போது, குறுகியே நொம்மாடா, நொந்நாகா என்று நிற்கும். நொ என்பதே இயல்பான வடிவமாயின், அது 'து' என்னும் வினை துக்கி றான், துப்பான் என்றாவது போல, நொக்கிறான், நொப்பான் என்று நிகழ்கால எதிர்காலங்களில் ஆதல் வேண்டும். அங்ஙனமாகாமை காண்க.

இனி, “உச்ச காரம் இருமொழிக் குரித்தே” என்ற வரையறை கூட வழுவோவென்றையுறக் கிடக்கின்றது.

இங்ஙனம் தொல்காப்பியர் பல இடத்தில் தவறினதற்குக் காரணம், அவரது ஆரியப் பிறப்பேயன்றி வேறன்று. கால்டுவெல் ஐயர் ஐம்பதாண்டுகள்போல் தமிழை யாராய்ந்தும், அவரது ஒப்பியலிலக்கணத்தில் சிலவிடத்துத் தவறினது, அவரது அயற் பிறப்பாலேயே.

இங்ஙனம் சில தொல்காப்பிய வழுக்களை எடுத்துக் கூறியதால், தொல்காப்பியத்தை இழித்துக்கூறினேன் என்று எள்ளளவும் எண்ணற்க. அங்ஙனம் கூறுபவன் கடைப்பட்ட கயவனே என்பதற்கு ஐயமில்லை. இற்றைத் தமிழ்நிலையின் உயிர்நாடி தொல்காப்பியம் ஒன்றே. சில குற்றத்தைக் குற்றமென்று கூறினேனேயொழிய வேறன்று என்க.

காலம்: தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டாசானை “நான்மறை முற்றிய” என்றும், தொல்காப்பியரை “ஐந்திரம் நிறைந்த” என்றும், தொல் காப்பியச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் அடை கொடுத்துக் குறிப்பதனால் ஆரிய மறையை நாலாக வகுத்த வேதவியாசர் காலத்திற்கும், ஐந்திரத்திற்கும் பிற்பட்ட 'அஷ்டாத்யாயீ'யை இயற்றிய பாணினி காலத்திற்கும், தொல் காப்பியர் இடைப் பட்டவர் ஆவர். பாரதக்