பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்

௭௫

முடி நாகராயர் செய்யுளிற் காணப்படுகின்றது. படர்க்கையில் மாத்திரம் வழங்கப்பட்ட வியங்கோள், பிற்காலத்தே முன்னிலையிலும் தன்மையிலும் வழங்கப்படுதல் இயற்கை யாதலின், முடிநாகராயர் தொல் காப்பியனார்க்கு முற்பட்டவ ரென எவ்வாறு கூற முடியும்?” [1] என்கிறார் சாத்திரியார்.

“......முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடு
மன்னா தாகும் வியங்கோட் கிளவி” (தொ.வி.29)

என்பது சாத்திரியார் குறித்த நூற்பாவாகும். இதன் பொருளையே சாத்திரியார் நன்றாயறியவில்லை. 'மன்னாதாகும்' என்னும் வினைக்குப் 'பெரும்பாலும் வராது' என்பதே நூற்பாவிற் குறித்த பொருள்.

ஒருவேளை,

“கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்
றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே”

என்னும் நூற்பாவில் (தொல். இடை. 4) மிகுதிப் பொருள் மன்னைச் சொற்குக் குறிக்கப்படவில்லையே என்று அவர் கூறலாம்.

தமிழிலக்கண முன்னூல்கள் மிகப் பழையவாதலானும், அவற்றில் பல இலக்கணச்செய்திகள் முற்றும் எழுதப்படாமையானும், தொல்காப்பியம் பல பற்றியங்(விஷயம்) களில், முன்னூல்களிற் கூறியவற்றையே கூறுதலானும், தொல்காப்பியத்தில் ஒன்றைப்பற்றிய எல்லாச் செய்திகளையுங் காணமுடியாது.

நன்னூலார் பிற்காலத்தவராதலின், தொல்காப்பியரினும் விரிவா யாராய்ந்து,

“மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம்
கழிவு மிகுதி நிலைபே றாகும்”

என்று மன்னை யிடைச்சொற்பொருள் ஆறாகக் கூறியுள்ளார். மிகுதி = பெரும்பான்மை. நன்னூலாரும் சில பொருள்களை விட்டுவிட்டனர்.

இனி, தொல்காப்பிய நூற்பாவிலுள்ள 'மன்னாதாகும்' என்னுஞ் சொல் வினைச்சொல்லாதலின், இடைச்சொல்லாகாதெனின், இடைச்சொல் இயற்கையினாயது, பெயரி னாயது,


  1. 1.P.S.s>சாத்திரியார் தொல் எழுத்ததிகாரம்,முகவுரை பக்.1,2.