பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௦௬

ஒப்பியன் மொழிநூல்

குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுற லஞ்சி
மணிநா வார்த்த மாண்வினைத் தேர
னுவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன்
கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்
போதவி ழலரி னாறு
மாய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே.” (அகம். 4)

“முல்லையென்னாது "வைந்நுனை" என்றதனான், அவை அரும்பியது அணித்தென்பது பெறப்பட்டது; சின்னாள் கழியின் வைந்நுனையாகாது மெல்லென்னுமாகலின். இல்லமும் கொன்றையும் மெல்லென்ற பிணியவிழ்ந்தன வென்றான், முல்லைக்கொடி கரிந்த துணை அவை முதல் கெடாது முல்லை யரும்பிய காலத்து மலர்ந்தமையின். இரலை மருப்பினை, 'இரும்பு திரித்தன்ன மருப்பு' என்றதூஉம், நீர் தோய்ந்தும் வெயிலுழந்த வெப்பந்தணிந்தில, இரும்பு முறுக்கிவிட்ட வழி வெப்பம் மாறா விட்டவாறுபோல வெம்பா நின்றன வின்னுமென்றவாறு. 'பரலவ லடைய விரலை தெறிப்ப' எனவே, பரல் படுகுழிதோறுந் தெளிந்து நின்ற நீர்க்கு விருந்தினவாகலாற் பலகாலும் நீர் பருகியும் அப் பரல் அவலினது அடைகரை விடாது துள்ளுகின்றன வென அதுவும் பருவந் தொடங்கினமை கூறியவாறாயிற்று. 'கருவி வானங் கதழுறை சிதறி' என்பதூஉம் பலவுறுப்புங் குறைபடாது தொக்கு நின்றன மேகந் தனது வீக்கத்திடைக் காற்றெறியப்படுதலின் விரைந்து துளி சிதறின வென்றவற்றையும் புதுமை கூறினாள்; எனவே, இவையெல்லாம் பருவந் தொடங்கி யணித்தென்றமையின் வற்புறுத்துதற்கு இலேசாயிற்று. 'குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி' என்பது, கொய்யாத உளை பல்கியும் கொய்த உளை பலகாலுங் கொய்ய வேண்டுதலுமுடைய குதிரை யென்றவாறு; எனவே, தனது மனப்புகழ்ச்சி கூறியவாறு. அத்துணை மிகுதி யுடைய குதிரை பூட்டின வாரொலி விலக்காது மணியொலி விலக்கி வாராநின்றான் அங்ஙனம் மாட்சிமைப்பட்ட மான் றோனாதலா னென்றவாறு. அதற்கென்னை காரணமெனின், 'துணையொடு வதியுந் தாதுண் பறவை' எனவே, பிரிவஞ்சி யென்றவாறு. பறவை நாவொலி கேட்பின் வண்டு வெருவுமாகலின் அது கேளாதிரு மணிநாவினை இயங்காமை யாப்பித்த மாண்