பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௨௩

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப” (171)

என்று கூறியிருப்பதா லறியப்படும்.

மறைநூ லிலக்கணம் தொல்காப்பியர் கூறியபடியே திருவள்ளுவரும் கூறுகின்றார்.

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்”


நக்கீரர் பாடிய “முரணில் பொதியில்” என்னும் செய்யுளை மந்திரமன்றென்றும் அங்கதப் பாட்டென்றும் பேராசிரியர் கூறியிருப்பதாலும், 'நீத்தார் பெருமை' என்னும் அதிகாரத்தில் முனிவர் சாவிப்பைத் தனியாய்,

“குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது”

என்று கூறியிருப்பதாலும், “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி” என்பது, முனிவருடைய வாழ்விப்புச் சாவிப்பாற்றலைக் குறியாது, மக்கள் கைக்கொள்ள வேண்டிய விதியாக, அல்லது கடவுளின் கட்டளையாக, முனிவர் கூறிய மறைபொருளுள்ள கூற்றுகளையே குறிப்பதாகும்.

பக்குவான்மாக்களுக்கன்றிப் பிறர்க்கறிவிக்கப் படாமல் மறைக்கப்பட்டதனால் மறைமொழி யெனப்பட்டது.

மறை, மறைநூல் என்பன தமிழர் வேதத்தையும், மறைமொழி என்பது அவ் வேதக் கூற்றையும், வாய்மொழி, மந்திரம் என்பன அவ் வேதச் செய்யுள்களையும் குறிப்பனவாகும்.

நம்மாழ்வார் வாய்மொழியென்ற சொல்லையும், திருமூலர் மந்திரம் என்னும் சொல்லையும் தெரிந்து கொண்டனர்.

வாய்மொழி என்பது வாய்க்கும் அல்லது நிறைவேறும் சொல்லென்றும், மந்திரம் என்பது மனத்தின் திரம்பற்றிய சொல்லென்றும் பொருள்படும்.

மனம், திரம் என்பன தமிழ்ச்சொற்களே. முன்னுதல் - நினைத்தல். முன் + அம் = முன்னம் - முனம்.

A.S.munan, to thinks. Ger. meinen, to think. முனம் — மனம் (முன் - மன்) ஒ.நோ : முடங்கு — மடங்கு.