பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௨௪

ஒப்பியன் மொழி நூல்

முறுமுறு — மர்ம௧ர் (Murmur), E.

மனம் — மனஸ் (Sans), mens(Lat),menos(Gr.), menos(Gr.), mind

(E).

திரம் = உறுதி. திரம் — திறம். ர — ற. ஒ.நோ : ஒளிர் — ஒளிறு; கரு(ப்பு) — கறு(ப்பு). திரம் என்பதையே ஸகரமெய் முதற் சேர்த்து ஸ்திரம் என்றனர் வடமொழியாரியர். ஒ.நோ. நாகம் - snake (E).

முன் - மன். மன் + திரம் = மந்திரம். ஒ.நோ : தேன் + தட்டு = தேந்தட்டு.

வாய்மொழி மந்திரம் என்னுஞ் சொற்கள் ஒருபொருட் சொற்களாகத் தொல்காப்பியத்திற் கூறப்படினும், வழக்குப் பொருளில் அவற்றுக்கு வேறுபாடுண்டு. அது பின்னர்க் கூறப்படும்.

“எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியிற்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே”

என்று தொல்காப்பியப் பிறப்பியலிற் (20) கூறியது தமிழ மறை யையேயன்றி ஆரிய மறையையன்று.

முதலாவது, அந்தணர் என்னும் சொல் முனிவரைக் குறித்த தென்றும், தொல்காப்பியம் இலக்கணங் கூறுவது தமிழ் எழுத்து கட்கேயென்றும் அறிதல் வேண்டும்.

இரண்டாவது, “அஃதிவண் நுவலாது.... அளவுநுவன் றிசினே” என்பதால், நுவலத்தக்க எழுத்தொலியையே நுவலாததாகக் கூறுகின்றார் தொல்காப்பியர் என்றறிதல் வேண்டும். தொல்காப்பியத்தில் நுவலத்தக்க எழுத்துகள் தமிழ் எழுத்துகளே. ஆகையால், ஒப்பீட்டு (Comparative) முறையாலும் ஆரிய வெழுத்துப் பிறப்புக் குறிக்கப்படவில்லை.

தொல்காப்பியர் காலத்தில் ஆரிய மொழியில் இலக்கண மிருந்த தில்லையென்று முன்னமே கூறப்பட்டது.