பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௪௪

ஒப்பியன் மொழிநூல்

1. பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை
யின்மை யுடன்பொரு ளேழென மொழிப.

2. மண்புன லனல்கால் வெளிபொழு தாசை
யான்மா மனதோ டொன்பதும் பொருளே.

3. வடிவஞ் சுவையிரு நாற்ற மூறெண்
ணளவு வேற்றுமை புணர்ச்சி பிரிவு
முன்மை பின்மை திண்மை நெகிழ்ச்சி
சிக்கென லோசை யுணர்ச்சி யின்பந்
துன்பம் விருப்பம் வெறுப்பு முயற்சி
யறமறம் வாதனையொடு குணமறு நான்கே.

4. எழும்பல் விழுதல் வளைத னிமிர்த
னடத்த லுடனே கருமமை வகைத்தே.

5. பொதுமை மேல்கீ ழெனவிரு வகையே.

6. மன்னிய பொருளின் கண்ணவா யவற்றின்
வேற்றுமை தெரிப்பன பலவாஞ் சிறப்பே.

7. ஒற்றுமை யாப்பஃ தொன்றே யென்க.

8. முன்னின்மை பின்னின்மை முற்று மின்மை
யொன்றினொன் றின்மையென் றின்மை நான்கே

9. மண்ணீ ரனல்கான் முறையே நாற்றந்
தட்பம் வெப்ப மூற்ற மாகி
மெய்ப்பொரு ளழிபொருண் மேவு மென்க.

10. அணுக்கண் மெய்ப்பொருள் காரிய மழிபொருள்
பிருதிவி நித்திய வநித்திய வணம்பெறும்
நிலையணுப் பொருணிலை யில்லது காரியம்.

11. அதுவே:—
உடல்பொறி விடய மூவகைப் படுமே
நம்மனோர் யாக்கை மண்கூற் றுடம்பு
நாற்றங் கவர்வது நாசியி னுனியே
மண்கல் முதலிய விடய மாகும்.

12. நீரிறை வரைப்பிற் கட்டுநீ ருடம்பு
சுவைதிறங் கவர்வது நாவி னுனியே
கடல்யா றாதி விடய மாகும்.