பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௪௬

களும், 'ஊழணி தைவரல்' (மெய். 14) என்னுந் தொடரும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருப்பதால், அது இயற்றப்பட்ட காலத்தில், தமிழ் நாட்டிற் கைத்தொழில் சிறந்திருந்தமை யுணரப்படும்.

அக் கைத்தொழில் பல திறத்தன. அவற்றுள் நெசவு மட்டும் இங்குக் கூறப்படும்.

நெசவு— (Weaving)

“உடைபெயர்த்துடுத்தல்” என்பது தொல்காப்பியம் (மெய். 14). பருத்தி நெசவு முதன்முதல் இந்தியாவில்தான் செய்யப்பட்ட தென்றும், அங்கிருந்தே மேனாடுகளுக்குப் பரவிய தென்றும் வயவர் சாண் மார்சல் கூறுகிறார்.

பண்டைக்காலச் சரித்திராசிரியரெல்லாம். மேனாடுகள் இந்தியாவினின்றும் இறக்குமதி செய்த பொருள்களுள், துணி ஒன்றாகத் தவறாது குறிப்பிடுகின்றனர்.

18ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை, இந்தியாவினின்றே மேனாடுகட்குத் துணி ஏற்றுமதியானமை, பின்வருங் குறிப்பினாலறியலாம்.

“தற்கால இந்தியாவின் வறுமைக்கு மற்றொரு பெருங் காரணம், ஐரோப்பாவில் பொறிவினைத் தோற்றத்தினாலும், திருந்திய முறைச் செய்பொருள் வினையின் பரவலினாலும் ஏற்பட்ட கைத்தொழில் தேவைக்குறைவே. ஐரோப்பா, இந்தியரின் சொந்தத் துறைகளில், இன்னும், எண்ணுக்கெட்டாத தொன்று தொட்டு எவற்றுக்கு அவர்களைச் சார்ந்திருந்தோமோ அவையும், அவர்களுக்கே விதப்பாயுரியவுமான கைத்தொழில்களிலும் செய்பொருள் வினைகளிலும், அவர்களை வெல்லக் கற்றுக் கொண்டதினால், உண்மையில் இனி யொருபோதும் எதற்கும் இந்தியாவைச் சாந்திருப்பதில்லை. உண்மையில், காரியங்கள் தலைகீழாய் மாறிவிட்டன. இவ் வெளிப்பாடு இந்தியாவை முற்றிலும் கெடுத்துவிடுவதாக அச்சுறுத்துகின்றது.

“ஐரோப்பாவிற்குத் திரும்புவதற்குச் சற்று முன்பே, கைத்தொழில் செய்யும் கூற்றங்களிற் சிலவற்றினூடு வழிச் சென்றேன். அங்குப் பரவியிருந்த பாழ்நிலைக்கு ஏதும் ஒப்பாகாது. வேலையறைகளெல்லாம் சாத்தப்பட்டிருந்தன. அங்கே வாழும்இலக்கக்கணக்கான நெசவுத்தொழின் மக்கள்