பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முதலாவது தோன்றிய ஒரு பொருளின் அல்லது தொழிலின் பெயர், பிற்காலத்தில் அதன் இனத்திற்குப் பொதுப்பெயராய் வழங்குதல் இயல்பே. தோடு என்னும் ஓலைப் பெயர், பிற்காலத்தில் அதற்குப் பதிலாயணிப்படும் கம்மல் (கமலம்) வகைக்குப் பொதுப் பெயராய் வழங்கு வதையும்; வில்லேருழவர், சொல்லேருழவர், தேரோர் களவழி யென்னும் வழக்குகளையும் நோக்குக.

பழ நார்வீஜியம் (Old Norse), ஆங்கிலோ-சாக்ஸன் என்ற மொழிகளில், முறையே, erfidhi, earfodh என்ற சொற்கள் முதலாவது உழவைக் குறித்துப் பின்பு உழைப்பைக் குறித்தன வென்றும். லத்தீனில் ars, artis என்ற சொற்கள் முதலாவது உழவைக் குறித்துப் பின்பு கலைப் பொதுப்பெய ராயிற்றென்றும், அச் சொற்கட்கு மூலம் ar(to plough) என்பது என்றும், முதலாவது கற்பிக்கப்பட்ட கலை உழவேயென்றும் மாக்கசு முல்லர் கூறியிருத்தல் காண்க.1

ஏர் = கலப்பை. ஏர்த்தொழில் = உழவு.

E. ear (ஏர்.), to plough. A.S. erian, L. aro, GK. aroo - root ar. to plough. E. arable, adj.

E. Share - கொழு. M.E. schar, A.S. scear, Ger. schar, schaar.

காறு = கொழு.

க-ச, போலி. ஒ.நோ : திகை - திசை (தேவா. 308:1), இகல் - இசல். சேம்பர்ஸ் அகராதியில் shear (to cut) என்பது share என்பதன் மூலமாகக் காட்டப்பட்டுள்ளது. அங்ஙனமாயினும், shear என்பது சிறை என்னும் தமிழ்ச் சொல்லை ஒத்திருத்தல் காண்க.

இங்ஙனம், மேனாடுகளில் மாந்தன் முதற்றொழில்பற்றிய தமிழ்ச்சொற்கள் வழங்குவதற்குக் காரணம் பின்னர்க் கூறப்படும்.

கைத்தொழில் (Industries)

தாழ், வாள், வேல், கழல், தோல் (கேடகம்), குடை, கணை, தேர், யாழ், இழை, துடி, பொன் முதலிய பெயர்