பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௬௦

ஒப்பியன் மொழிநூல்

அகத்தியர் காலம்:

அகத்தியர் இராமர் காலத்தவராதலின், ஏறத்தாழ கி.மு. 1200 ஆண்டுகட்கு முற்பட்டவராவர்.

அகத்தியர் கதைகள்

(1) விந்தத்தின் செருக்கடக்கினது;

ஒருகாலத்தில் பனிமலை (இமயம்) நீர்க்கீழ் இருந்தது. அப்போது விந்தியமலை மிகவுயரமாய்த் தோன்றிற்று. பனிமலை யெழுந்தபின், அதனொடு ஒப்பு நோக்க வித்தம் மிகச் சிறிதாய்த் தோன்றிற்று. இதே விந்தத்தின் செருக்கடக்கம். இதை அகத்தியர் பெயரொடு தொடுத்துக் கூறக் காரணம், அவர் தென்னாடு வந்தபின் குமரி நாட்டைக் கடல் கொண்டமையே. அகஸ்தியர் என்னும் பெயருக்கு, விந்தத்தின் அகத்தை (செருக்கை) அடக்கினவர் என்று, வடமொழியிற் பொருள் கூறப்படுகின்றது.

(2) கடலைக் குடித்தது.

முன்பு கடலாயிருந்த பாகம் பின்பு நிலமாகிப் பனிமலை தோன்றியதையே, அகத்தியர் கடலைக் குடித்ததாகக் கதை கட்டியதாகத் தெரிகின்றது.

(3) குடத்திற் பிறந்தது

மேற்குத் தொடர்ச்சிமலை முற்காலத்தில் குடமலை யெனப்பட்டது. தென் மதுரையைக் கடல் கொண்டபின், அகத்தியரிருந்தது பொதியமலை. அது குடமலையின் ஒரு பகுதி. குடதிசையில் அல்லது குடமலையிலிருந்தமை பற்றி அகத்தியர் குடமுனிவர் என்று கூறப்பட்டிருக்கலாம். பழைமையர் தமது வழக்கம்போல் அதன் உண்மைப் பொருளைக் கவனியாது, குடத்திற் பிறந்தவராகக் கதை கட்டி, அதன் மறுபெயர்களான கும்பம் கலசம் முதலிய சொற்களாலும் அவர்க்குப் பெயரமைத்திருக்கலாம்;

ஆர்க்காட்டுப்புராணத்தில், ஆர்க்காடு என்னும் பெயரை ஆறுகாடு என்று கொண்டு, அதைச் சடாரண்யம் என்று