பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்தியர் கதைகள்

௧௬௧

மொழி பெயர்த் திருப்பதாகப் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் கூறுவர்.

(4) அங்குட்ட அள வாயுள்ளது:

அகத்தியர் குள்ளமாயிருந்ததினால் குறு முனிவரென்றும் குட்டமுனிவரென்றும் கூறப்பட்டார்.

குட்டை குட்டம், ஒ. நோ? பட்டை—பட்டம், தட்டை—தட்டம்.

செய்யுளடிகள் குறளுஞ் சித்துமாய்க் குறுகி வருவது குட்டம்படுதல் என்றும், கைகால் விரல்கள் அழுகிக் குட்டையாகும் தொழு நோயும் குரங்குக்குட்டியுங் குட்டமென்றுங் கூறப்படுதல் காண்க.

குட்டத்தைக் குஷ்டமென்பர் வடநூலார். ஒ? நோ, கோட்டம்கோஷ்டம் (வ), முட்டி—முஷ்டி (வ).

சில பெயர்களில், அம் என்னும் முன்னொட்டுச்சேர்தல் இயல்பு:

கா : அங்கயற்கண்ணி, அங்காளம்மை.

இங்ஙனமே குட்டமுனி என்னும் பெயரும் அங்குட்டமுனி என்று ஆகியிருக்கலாம்.

அங்குட்டன் என்று ஏற்கனவே பெருவிரலுக்குப் பெயர். குட்டையாயிருப்பதால் கட்டைவிரல் குட்டன் எனப்பட்டது அஃறிணைப் பெயரும் அன் ஈறு பெறும். கா : குட்டன் = ஆட்டுக்குட்டி, குட்டான் = சிறு பெட்டி, சிறு படப்பு. அம் + குட்டன் — அங்குட்டர். இது வடமொழியில் அங்குஷ்டன் எனப்படும்,

அகத்தியர் பெயராள அங்குட்டன் என்பதையும், பெருவிரலின் பெயரான அங்குட்டன் என்பதையும், ஒன்றாய் மயக்கி, அகத்தியர் அங்குட்ட (பெருவிரல்) அளவினர் என்று பழைமையர் கூற நேர்த்திருக்கலாம்,

(5) மாநிலத்தைச் சமனாக்கியது.

பனிமலை ஒரு காலத்தில் நீர்க் கீழிருந்து பின்பு வெளித் தோன்றியது. அகத்தியர் தெற்கே வந்த பின், குமரி நாட்டைக்