பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழிலக்கியத்தின் உச்சநிலைக் காலம்

௧௬௫

ஐந்திர இலக்கணத்தில், விளி வேற்றுமை முன்னூல் களிற்போல முதல் வேற்றுமையில் அடக்கப்படாது, தனி வேற்றுமையாகக் கூறப்பட்டது. இறையே.

“இந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்”என்று கூறினர் அகத்தியர்.

வேற்றுமைகள் தோன்றின வகையும் முறையும் பீன்னர்க் கூறப்படும்.

(4) அகத்தியம் முத்தமிழிலக்கணமாதல்.

ஒரு மொழியில், முதன்முதலிலக்கணய தோன்றும்போது, கூடிய பக்கம் எழுத்து சொல் யாப்பு என்ற மூன்றுக்கே தோன்றும். அகத்தியத்தில் இம் மூன்றுடன் பொருளிலக் கணமும், அதன்மேலும் இசை நாடக விலக்கணங்களும் கூறப் பட்டிருந்தலின் அது முதனூலாயிருக்க முடியாதென்பது தேற்றம்.

அகத்தியத்திற்கு ஆரியவிலக்கணத் தொடர்பின்மை

அகத்தியம் வடமொழியிலக்கண நூல்கட்கு மிகமிக முந்தியதாதலானும், தமிழிலக்கணத்திலுள்ள குறியீடுகளெல்லாம் செந்தமிழ்ச் சொற்களே யாதலானும், வடமொழியிலக்கணத்திலில்லாத சில சொல்லமைதிகளும் பொருளிலக்கணமும் இசைநாடகவிலக்கணமும் தமிழிலுண்மையானும், ஆரியர் இந்தியாவிற்குள் புகு முன்பே திராவிடர் தலைசிறந்த நாகரிகம் அடைந்திருந்தமையானும், அகத்தியத்திற்கும் வடமொழியிலக்கணங்கட்கும் எட்டுணையும் இயைபின் றென்க.


“ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன் கேட்
டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க”

என்று புத்தமித்திரன் கூறியது, தமிழ்நாட்டிற் பௌத்தத்தைச் சிறப்பித்தற்குக் கூறிய புனைந்துரையே யாகும்.

தமிழிலக்கியத்தின் உச்சநிலைக் காலம்
The Augustan Age of Tamil Literature.

தமிழிலக்கியத்தின் உச்சநிலைக்காலம் தலைக்கழகக் காலமே யென்பதற்குக் காரணங்கள் : —