பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒப்பியன் மொழி நூல் (1) தமிழ்ப் பயிற்சி வரவரக் குறைதல். தலைக்கழகக் காலத்தில், தமிழ் முத்தமிழாயிருந்து, பின்பு இடைக்கழகக் காலத்தில் வெவ்வேறாய்ப் பிரிந்தது. கடைக் கழகக்காலத்தில் இசை நாடக நூல்களிருந்தும் புலவராத பெரும்பாலும், பயிலப்படவில்லை. இது போதா, இசை நாடக நூல்கள் இல்லாமையுடன், இயற்றமிழும் சரியாய்க் கற்கப்பட வில்லை, இயற்றமிழ்ப் பகுதிகளில் முக்கியமான பொருளிலக் கணம் தெரிந்த புலவர் இதுபோது மிகச் சிலரேயாவர். (2) முக்கழகங்களும் முறையே ஒடுங்கல். முக்கழகங்களும் காலத்தினாவன்றித் தன்மையினாலும் தலை யிடை கடையாயினமை, கீழ்க் காணும் குறிப்பால் விளங்கும்; 4 தலை இடை ைெட கடை உறுப்பினர் தொகை 59 பாடியார் தொகை 4449 3700 கழகமிருந்த ஆண்டுத்தொகை 4440 3790 1850 இரீயினார் தொகை 59 அரங்கேறிய அரசர் தொகை 7 (3) கலைகள் வரவர மறைதல். தலைக்கழகக் காலத்தில் எத்துணையோ கலைகள் தமிழிலிருந்தன. அவை ஒவ்வொன்றாய் மறைத்து போயின, இன்றும் கால் வழக்கிலில்லாவிடினும் செயல் வழக்கிற் பல கலைகளுள்ளன. அவற்றுள் ஒன்று சிற்பம், சிற்பக்கலைக்குரிய அக்கிரபட்டியல், பலகை, முனை, இதழ், குடம், தாடி, கால், நாகபந்தம், போதிகை, யாளம், கூடு, நாணுதல், மதளை, பூமுனை, கொடி, சாலை, கும்பம், பீடம், மண்டபம் கோபுரம், கொ ஒங்கை சுருன்யான தூண, பட்டம், அளவு உத்திரம், முட்டி பந்தம், கொடிவளை, ஆளாங்கு, அணிவெட்டிக்காய், கோமுகம் முதலிய குறியீடுகள் இன்றும் தமிழாயுள்ளன.* பிற குறியீடுகளும் தற்போது வடசொல்லாயிருப்பினும், தமிழி னின்றும் மொழி பெயர்க்கப்பட்டவையே: இன்றும் தமிழ் நாட்டிற் கட்டடத் தொழில் தமிழராலேயே செய்யப்படுவதும் பார்ப்பனராற் செய்யப்படாமையுங் காண்க:

  • Dravidian Architecture. pp, 10-23.