பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழிலக்கியத்தின் உச்ச நிலைக்காலம்

௧௬௭

(4) இலக்கணம் வரவரப் பிறழ்தல்.

தொல்காப்பியர் காலத்திலேயே நூலில் இலக்கணப் பிழைகள் தோன்றினமை முன்னர்க் கூறப்பட்டது. அதோடு வழக்கிலும் பல வழுஉ முடிபுகள் பிற்காலத்தில் தோன்றியுள்ளன.

அல்ல என்னும் படர்க்கைப் பலவின்பால் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றே, ஏனை எண் ணிடங்கட்கும் வழங்கி வருதல் காண்க;

(5) சொற்கள் வரவரப் பொருளிழத்தல்.

தலைக்கழகத்திற்குப் பின், ஒரு பொருட் பலசொற்களைப் புலவர்கள் பெரும்பாலும் திட்டமில்லாது வழங்க வந்திருக்கின்றனர்.

ஈ, தா, கொடு என்பன, முறையே இழிந்தோன் ஒத்தோன் உயர்ந்தோன் சொற்களாகும். இவை பிற்காலத்தில் வேறுபாடின்றி வழங்கப்பட்டுள்ளன.

(6) தமிழ் வரவரத் தூய்மைகெடல்.

தொல்காப்பியம் முழுமையிலும், ஐந்தாறே வட சொற்கள் உள்ளன. பிற்காலத்தில் அவை வரவரப் பெருகினமையை, முறையே, கடைக்கழகநூல்கள், திருவாசகம், கம்பராமாயணம், வில்லிபுத்தூராழ்வார் பாரதம் முதலியவற்றை நோக்கிக் காண்க . பிற்காலத்திற் செய்யுள் செய்தார் தமிழின் தூய்மையைச் சிறிதுங் கருதாமல், மோனை யெதுகையொன்ற நோக்கி, வடசொற்களை ஏராளமாயும் தாராளமாயும் வழங்கி விட்டனர்.

(7) நூற்செய்யுள் வரவர இழிதல்.

முக்கழகக் காலங்களிலும், பாக்களாலேயே பெரும்பாலும் நூல்களியற்றப்பட்டன. பிற்காலத்தார் பெரும்பாலும் பாவினங்களையே தெரிந்துகொண்டனர், பாவினும் பாவினம் இயற்றுதற்கெளிதாயிருத்தலின்:

(8) பொருளினும் சொல்லே வரவரச் சிறத்தல்,

கழகக் காலங்களில் சொல்லினும் பொருளே சிறந்ததென்று, செந்தொடையாயினும் பொருள் சிறப்புச் செய்யுள்ஒ.மொ .-16)