பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௬௮

ஒப்பியன் மொழி நூல்

செய்தனர். பிற்காலத்தில், மடக்கு, திரிபு முதலிய சொல்லணிகளையும், பலவகை ஓவிய (சித்திர)ச் செய்யுட் களையும் சிறப்பாகக் கொண்டு, அவற்றிலேயே தம் திறமையைக் காட்டினர். பொருளணியில் இயற்கைக் கருத்தும் சொல்லணியில் செயற்கைக் கருத்தும் அமைதல், செய்யுளி யற்றிப் பயின்றவர் யாவர்க்கும் புலனாம்.

(9) நூற்பொருள் வரவர இழிதல்.

முற்காலப் புலவர் மேனாட்டார் போலப் பல்வகைக் கலை நூல்களை இயற்றினர் : பிற்லாலப் புலவரோ கோவை, உலா, அந்தாதி, கலம்பகம் முதலிய புகழ் நூல் வகைளையே இயற்றுவாராயினர். ஒருவர் கோனவ பாடிவிட்டால், தலை சிறந்த புலவராக மதிக்கப்படுவர். 'யாவையும் பாடிக் கோவயைப் பாடு' என்பது பழமொழி.

பிற்காலத்தில் வகுத்த 96 பனுவல்களும் பெரும்பாலும் புகழ் நூல்வகைகளே, இதனால் பிற்காலத்தாரது கலை வர்ச்சியின்மை வெளியாகும்.

செய்யுள் கட்கும் நூலாவுக்கும் குலமுறை வகுத்ததும், பிற்காலத்தார் புல்லறிவாண்மையைக் காட்டும்.

கடைக்கழகக் காலத்தில் நால்வர் தனித்தனி நாற்பது செய்யுள் கொண்ட நூலொன்றை யியற்றினர். பிற்காலத்துப் பாட்டியல்கள் அவற்றின் தொகையிலிருந்தும், 'நானாற்பது' என்றொரு நூல்வகையை வகுத்து கொண்டது நகைப்பிற் கிடமானதே. கதையுணர்ச்சியிழந்தமையாலும், வடமொழியினின்றும் வந்த பழமைக் கல்வியினாலும், சரித்திரம் திணை நூல் என்னும் ஈர் அறிவியற்கலைகட்கும் மாறாகப் பாவியங் (காவியம்) களில், நாட்டுப்படலம் நகரப் படலம் முதலிய பகுதிகளில், தம் மதிநுட்பத்தைக் காட்டுவதொன்றே குறிக் கோளாகக் கொண்டு, பொய்யும் புலையுமானவற்றை யெல்லாம் புனைவாராயினர் பிற்காலப்புலவர்.

(10) ஆட்பெயர்கள் வரவர வடசொல்லாதல்,

கடைக்கழகத்திற்கு முன் காலத்தில், அரசர் பெயர்கள் கடுங்கோன் காய்சினன் எனச் செந்தமிழ்ப்பெயர்களாயிருந் தமையும், பின் காலத்தில் ஜடிலவர்மன் பராக்கிரமன் என வட மொழிப்பெயர்களானமையும், படைத்தலைவன், மேலோன் என்று ம் தனித்தமிழ்ப் பெயர்களிருப்பவும், அவற்றுக்குப்