பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைக்கழக இலக்கியம் ஓர் இலக்கியமாகாமை

௧௬௯

பதிலாய், முறையே ஏனாதி (சேனாபதி), எட்டி (சிரேஷ்டின்) என்னும் வடமொழிப் பெயர்கள் பட்டப்பெயர்களாய் வழங்கி னமையுங் காண்க,

(11) வரவர வட- நூல் தமிழ் நூலுக்களவையாதல்,

(12) தமிழர் பல துறைகளிலும் வரவரக் கெட்டுவருதல்.

கடைக்கழக இலக்கியம் ஓர் இலக்கியமாகாமை

பலர் கடைக்கழக இலக்கியமே தமிழிலக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கினறனர், அதுவே இலக்கியமாயின், தமிழ் புன்மொழிகளில் ஒன்றாகவே வைத்தெண்ணப்படும்.

பதினெண் மேற்கணக்கான பத்துப்பாட்டு எட்டுத் தொகை என்பவற்றுள், பத்துப்பாட்டு, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை என்ற, நான்கே நூல் என்னும் பெயர்க்குச் சிறிது உரிமை யுடையவை, இவையும் புகமும் அகப்பொருளும் பற்றியலையே. ஏனைய நான்கும் தனிப் பாடற்றிரட்டுக்கள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தனி நூல்களாயினும், நன்னெறி அகப்பொருள் என்னும் இரு பொருள் பற்றியனவ.

கடைக்கழக நூல்கள் முப்பத்தாறனுள்ளும் ஒன்றாவது கலைபற்றியதன்று, பாவியமுமன்று. அவற்றுள் ஆசாரக் கோவையோ வட நூல் மொழிபெயர்ப்பாயும் பிறப்பிலுயர்வு தாழ்வு வகுப்பதாயும், எளிய பொருள்களைக் கூறுவதாயு முள்ளது,

கடைக்கழக நூல்கள் என்று கூறப்படும் முப்பத்தாறும், அக்கழகக் காலத்திலேயே தோன்றியவையல்ல. அவற்றுட் சில அதன் பின்னரே இயற்றவும் தொகுக்கவும்பட்டன. தொகை நூல்களெல்லாம் ஒருவரே ஒரே காலத்தில் தொகுத்தவையுமல்ல.

மேலும், நாலடியார், நான்மணிக்கடிகை முதலிய பல கீழ்க்கணக்கு நூல்கள், கடைக்கழகப் புலவராலியற்றப் படாமையும், மேற்கணக்கு பதினெட்டிற்கொப்பக் கீழ்க்கணக்கு பதினெட்டு வகுக்கப் பட்டமையும், நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன நந்நாநூறு பாடல்களாய்த் தொகுக்கப்பட்டமையும் நோக்கி உணர்ந்துகொள்க. பதினெண்கீழ்க்கணக்குள் பதினெட்டாவது நூல், கைந்நிலை