பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்தியர்க்கு முன்னரே...தமிழ் வளர்த்தமை

௧௭௬

நடைபெற்றதென்றும், அவற்றுள் இறுதித் தலைமுறையிலிருந்த புலவர் தொகையே வரலாற்றிற் கூறப்படுகின்றதென்றும் அறிந்து கொள்க. அகத்தியர், தொல்காப்பியர் காலத்திலிருந்து கடைக் கழகக் காலத்தில் கபில பரன நக்கீரரும், அண்மைக் காலத்தில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களும், ராவ்சாஹிப் மு. இராகவையங்கார் அவர்களும், ரா. இராகவையங்கார் அவர்களுமாகப் பெரும்பாலும் பார்ப்பனரே தமிழ் நூலுக் கதிகாரிகளாயிருந்து வருவது எவர்க்கும் தெரிந்ததே. குமரிநாடு எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு பழைமையானது தமிழ் என்பதை அவர் அறிவாராக. தொண்டு நும் என்னுஞ் சொற்களின் இயல்பு அகத்தியர் காலத்தவரான தொல்காப்பியரால் அறியப்படாமையாலும், இக்காலத்தினின்று பழங்காலம் நோக்கிச் செல்லச் செல்லத் தமிழில் வட சொற்கள் குறைந்துகொண்டே போவதினாலும், அகத்தியத்திலும் தொல்காப்பியத்திலும் ஐந்தாறு சொற்களே வட சொற் களாயிருத்தலாலும், அகத்தியர் காலத்திற்கு முன்பே எட்டுணையும் வடசொற்கலவாத தனித்தமிழ் வழங்கியதென்றும் அது தமிழராலேயே வழங்கப்பட்ட தென்றும் அறிந்து கொள்க:

பேரகத்தியம் என்று இதுபோது வழங்கும் நூல் பிற்காலத்தில் வடமொழிப்பற்றுள்ள ஒருவராற் செய்யப்பட்டது. அது பேரில் மட்டும் அகத்தியம் என்க.

அகத்தியர் சிற்றகத்தியம் பேரகத்தியம் என இருவேறு நூல்கள் இயற்றியதாகத் தெரியவில்லை. அகத்தியம் வழக்கற்றபின், அதன் நூற்பாத்திரட்டுக்களால், சிறியதும் பெரியதுமான இரண்டே முறையே அப்பெயர் பெற்று வழங்கியிருத்தல் வேண்டும். வடசொல்லைத் தமிழ்ச் செய்யுட்குரிய சொற்களில் ஒன்றாகவும் (எச். 1). மொழிபெயர்ப்பை வழி நூல் வகைகளுள் ஒன்றாகவும் (மரபு. 94) தொல்காப்பியர் கூறியது பொருந்தவில்லை. அவற்றுள், வடசொல் ஒரோவொன்று (வீணாக) வருவது அவர் காலத்தில் உள்ளதேயாயினும், மொழிபெயர்ப்பிற்குத் தமிழில் இடமிருந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும், தொல்காப்பியத்தில் அங்கனங் கூறியிருப்பதால், அது தமிழின் இன்றும் மொழி பெயர்த்த வட நூல்களையே முதனூல்களாகக்