பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ச்சொல் வளம்

௧௭௭

சோளம் முதலியவற்றினது தோகையென்றும், தென்னை பனை முதலியவற்றினது ஓலையென்றுங் கூறப்படும்.

முதலாவது தோன்றும்போது அரும்பு என்றும், போரும் பானபோது போது என்றும், மலர்ந்தபின் மலர் என்றும், விழுந்த பின் வீ என்றும், வாடிய பின் செம்மல் என்றும் கூறப்படும். பூ என்பது பொதுப்பெயர்.

அரும்பு என்னும் ஒரு நிலைக்கே, அதனதன் அளவுக்குத் தக்கபடி, அரும்பு, மொட்டு, முகிழ், முகை, மொக்குள் என வெவ்வேறு சொற்களுள,

பூக்கள் கோட்டுப்பூ, கொடிப்பூ. நீர்ப்பூ. நிலப்பூ என நால்வகையாக வகுக்கப்படும் இவற்றுடன், செடிப்பூ என்ப தொன்றும் சேர்த்துக்கொள்ளலாம்.

காயின் வெவ்வேறு நிலைகள், பூம்பிஞ்சு, திருகு பிஞ்சு, இளம் பிஞ்சு, பிஞ்சு, அரைக்காய், காய். முக்காற்காய், கன்னற் காய் அல்லது பழக்காய், கடுக்காய் அல்லது கருக்காய் என வெவ்வேறு சொற்களாற் குறிக்கப்படுகின்றன.

மாம்பிஞ்சு வடு என்றும், பலாப்பிஞ்சு மூசு என்றும் விதப்பித்துக் கூறப்படுகின்றன.

பருவத்திற் காய்ப்பது பருவக்காய் என்றும், பருவமல்லாத காலத்திற் காய்ப்பது வம்பக்காய் என்றும் கூறப்படுகின்றது.

முதிர்ந்தபின் கனிவில்லாதது காய் என்றும், கடினமானது நெற்று என்றும் கூறப்படுகின்றன:

செவ்வையாய்ப் பழுக்காத பழங்கள், வெவ்வேறு சாரணம் பற்றிச் சிவியல், சூம்பல், வெம்பல், சொத்தை எனப் பலவகையாகக் கூறப்படுகின்றன. இவற்றுள், சொத்தை வகைசொண்டு, சொத்தை, சொட்டை எனப் பல பெயராற் கூறப்படுகின்றது. சொத்தையான மிளகு பழம் அல்லது வற்றல் சொண்டு என்னுஞ் சொல்லால் மட்டும் குறிக்கப் படுதல் காண்க.

பழத்தின் தோல் வகைகட்கு, அதனதன் வன்மை மென்மைக்குத் தக்கபடி, தொலி, தோல், தோடு, ஓடு, சிரட்டை எனப் பல பெயர்களுள.