பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

முன்னுரை

குடுமியை உவமை கூறியிருப்பது, அது தமிழச் சிறுவனின் குடுமியினும் மிகச் சிறிதாயிருந்தமை பற்றியே.

மீசை: மீசையைச் சிரைத்துக்கொள்ளும் வழக்கம் ஆரியரதே. தமிழரிற் சிலர் மேனாட்டாரியரைப் பின்பற்றி இப்போது மீசையைச் சிரைத்துக்கொள்கின்றனர்.

(2) உடை: பார்ப்பனருள் ஆடவர் பஞ்சகச்சம் கட்டுகின்றனர்; பெண்டிர் தாறு பாய்ச்சிக் கட்டுகின்றனர். இவை தமிழர் வழக்கமல்ல. விசுவப் பிராமணரென்று தங்களைக் கூறிக்கொள்ளும் கம்மாளர், பார்ப்பனரோடு இகலிக் கொண்டே சிலவிடத்து அவரது உடுமுறையைப் பின்பற்றுகின்றனர்.

நூல்: பூணூலணிதல் பார்ப்பனர்க்கே உரியது, 'நூலெனிலோ கோல்சாயும்' என்னுஞ் செய்யுளும், 'ஊர்கெட நூலைவிடு' என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும்.

தமிழ்நாட்டு வணிகரும் ஐவகைக் கம்மியரும் பூணூல் பூண்டது, அறியாமைபற்றி ஆரிய முறையைச் சிறந்ததாகக் கருதிய பிற்காலமாகும்.

ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிப் பார்ப்பனருக்குத் தலைமையேற்பட்டபின், பல தமிழ் வகுப்பினர் தங்களுக்கு ஆரியத் தொடர்பு கூறுவதை உயர்வாகக் கருதினர். ஆரியக் குலமுறைக்கும் திராவிடக் குலமுறைக்கும் இயைபு இல்லா விடினும், ஆரியரல்லாதவரெல்லாம் சூத்திர வகுப்பின் பாற்பட்டவர் என்னும் தவறான ஆரியப் பொதுக்கொள்கைப் படி, தமிழரெல்லாருக்கும் சூத்திரப் பொதுப்பட்டம் சூட்டின பிற்காலத்தில், தமிழ் நாட்டிலுள்ள வணிகர் தங்களை வைசியரென்று சொல்லிக் கொண்டால், சூத்திரப்பட்டம் நீங்குவது உடன் ஆரியக் குலத் தொடர்புங் கூறிக்கொள்ளலாமென்று, ஆரிய முறையைப் பின்பற்றி வைசியர், சிரேஷ்டி (சிரேட்டி-செட்டி) என்னும் ஆரியப் பெயர்களையும், பூணூலணியும் வழக்கத்தையும் மேற்கொண்டனர். வணிகர் செல்வமிகுந்தவராதலின் அவரது துணையின் இன்றியமையாமையையும், தமிழர்க்குள் பிரிவு ஏற்பட ஏற்பட அவரது ஒற்றுமை கெட்டுத் தங்கட்குத் தமிழ்நாட்டில் ஊற்றமும் மேன்மையும் ஏற்பட வசதியாயிருப்பதையும், பார்ப்பனர் எண்ணித் தமிழ் வணிகருக்குத் தாராளமாய் வைசியப் பட்டம் தந்தனர்.

ஆரியர்க்குள், பூணூலணிவது பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் மேல் மூவரணத்தார்க்கும் உரியதேனும்,