பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{rh|கொடுந்தமிழ் நாடு||௧௮௩

யுணராது அவை வழங்கும் நாடுகளையும் அயன்மொழி நாடு களையுஞ் சேர்த்துக் கொடுந்தமிழ் நாடாகக் கூறினர் பவணந் தியார்,

"செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி"

என்று, தமிழொழிந்த பதினெண் நிலங்களை,

"சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகங்
கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம்
வங்கங்
கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலந்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே"

என்னுஞ் செய்யுளானறிக.

தெலுங்கு கன்னடம் முதலியவை தமிழினின்றும் பிரித்து போனபின்பே, பொங்கர் நாடு ஒளிநாடு முதலிய பழஞ்செந் தமிழ் நாட்டுப்பகுதிகள் கொடுந்தமிழ்நாடாகக் கூறப்பட்டன. இதனால், முன்பு கொடுந்தமிழ் நாடாயிருந்தனவ பல பின்பு பிறமொழி நாடாய் மாறிவிட்டன என்பதும், செந்தமிழ் நாடு வரவரத் தெற்கு நோக்கி ஒடுங்கிக்கொண்டே வருகின்ற தென்பதும், இதற்குக் காரணம் ஆரியக் கலப்பும் செந்தமிழ்த் தொடர்பின்மையும் என்பதும் அறியப்படும்.

செப்பு என்பது, சொல்லுதல் என்னும் பொருளில் மட்டும் திசைச் சொல்லாகும். மற்றப்படி அது செந்தமிழ்ச் சொல்லே என்பது,

"செப்பும் வினாவும் வழா அல் ஓம்பல்" (கிளவி. 13.)


"அஃதன் றென்ப வெண்பா யாப்பே" (செய், 78.)


என்பவற்றால் அறியப்படும்.

செப்பு என்பது, தெலுங்கில் சொல்லுதலையும், தமிழில் விடை சொல்லுதலையுங் குறித்தல் காண்க. அதோடு தமிழிலக்கணந் தோன்றிய தொன்முது காலத்திலேயே, செப்பு என்பது ஓர் இலக்கணக் குறியீடாயமைந்ததையும் நோக்குக, (செப்பல் வெண்பாவோசை.)

ஈ தா கொடு என்னும் மூன்று செந்தமிழ்ச் சொற்களில், ஈ என்பது எங்ஙனம் தன் நுண்பொருளை யிழந்து தெலுங்கில் வழங்குகின்றதோ, அங்ஙனமே செப்பு என்பதும் என்க.


ஒ. மொ .-17