பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௮௨

ஒப்பியன் மொழிநூல்

எல்லையின் புறத்தவும், கன்னடம் வடுகம் கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம் என்பன குடபாலிரு புறச்சையத்துட னுறைபுகூறுந் தமிழ்திரி நிலங்களும், முடி யுடையவரிடு நிலவாட்சியின் அரசு மேம்பட்ட குறு நிலக் குடுமிகள் பதின்மரும் உடனிருப்பிருவருவாகிய பன்னிருவர் அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும், தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையன என்றமையானும், "தமிழ் கூறும் நல்லுலகத்து................ பொருளும் நாடி" என நிறுத்துப் பின்னுஞ் "செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல் கண்டு" என ஓதியல தனாற் சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும், பன்னிரு நிலமாவன :—

" குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சைலத்தின் மேற்குப்பட்ட கொங் கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கரு நடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்.

"இவற்றுள், கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப்படுதலின், குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினார் போலும், பஞ்சத்திராவிடமெனவும் வடநாட்டார் உரைப்பவாகலான், அவையைந்தும் வேங்கடத்தின் தெற் காதலுங் கூடாமையுணர்க

"அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா என்றவாறு.

"குடாவடியுளியம் என்றவழி, குடாவடி என்பது குடகத்தார் பிள்ளைகட்கு இட்டபெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற்கிட்டபெயர், யான் தற்கரையவருது என்ற வழி கரைதல் என்பது கருநாடர் விளிப்பொருளுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. பாண்டில் என்பது தெலிங்கர் பசுவிற்கும் எருத்திற்கும் பெயராக வழங்குவது. கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்த வழிக் கண்டுகொள்க" என்று கூறியிருத்தல் காண்க.[1]

தெலுங்கு கன்னட முதலியவை பிற்காலத்தில் பிறமொழிகளாய்ப் பிரித்து போன பின்பு, அவற்றின் முன்னை நிலையை

.


  1. 1.தொல். எச். நூ. 1, 4 உரை