பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடுந்தமிழ் நாடு

௧௮௧

"தாயைத் தள்ளை என்ப குடநாட்டார், நாயை ஞமலி என்ப பூழி நாட்டார்" என்று திசைச்சொற்குக்காட்டுக்கூறினர் இளம் பூரணர். இங்குக் குறிக்கப்பட்ட இரு நாடுகளும் இப்போது மலையாள நாட்டின் பகுதிகளாக வுள்ளன.

நச்சினார்க்கினியர் பின் வருமாறு திசைச்சொற்குச் காட்டுக் கூறினர்.

"தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பனவற்றைப் பெற்றம் என்றும் , குட நாட்டார் தாயைத் தள்ளை என்றும், நாயை ஞெள்ளை என்றும்: குட்டநாட்டார் தந்தையை அச்சன் என்றும் , கற்காநாட்டார் வஞ்சரைக்கையர் என்றும்; சீதநாட்டார் ஏடாவென்பதனை எலுவன் என்றும், தோழியை இருளை என்றும், தம்மாமியென்பதனைத் தந்துவை என்றும்; பூழி நாட்டார் நாயை ஞமலி என்றும், சிறு குளத்தைப் பாழி என்றும்; அருவாநாட்டார் செய்பைச் செறு என்றும், சிறு குளத்தைக் கேணி என்றும்; அருவாவட தலையார் குறுணியைக் குட்டை என்றும் வழங்குப.

"இனிச் சிங்களம் அந்தோவென்பது, கருநடங் கரைய சிக்க குனிர என்பன; வடுகு செப்பென்பது : தெலுங்கு எருத்தைப் பாண்டிலென்பது : துளு மாமரத்தைக் கொக்கென்பது. ஒழித்தவற்றிற்கும் வந்துழிக் காண்க."

இதனால் தெலுங்கு, கன்னடம் முதலியவை ஒருகாலத்தில் தமிழின் திசைவழக்குகளாகவே இருந்தனவென்றும், பின்பு கிளை வழக்குகளாகி இறுதியில் வடசொறகலப்பால் வேறு மொழிகளாய்ப் பிரிந்து விட்டனவென்றும் அறியட்படும்.

தெய்வச்சிலையாரும் இக்கருத்தை யொட்டியே,

செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்து முள்ளோர் தத்தம் குறிப்பினையுடைய திசைச் சொல்லாகிய சொல் என்றவாறு.

"பன்னிரு நிலமாவன :-வையையாற்றின் ... நாடு, ஒளி நாடு, தென்பாண்டிநாடு. கருங்குட்ட நாடு. குடநாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழிநாடு, மலாடு, அருவா தாடு, அருவா வடதலை என்ப. இவை செந்தமிழ் நாட்டகத்த. செந்தமிழ் (சேர்ந்த) நாடென்றமையால், பிறநாடாகல் வேண்டுமென்பார் எடுத்துக்காட்டுமாற:—'கன்னித் தென் கரைக் கடற் பழத் தீபம் கொல்லம் கூபகம் சிங்கள மென்னும்