பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௮௦

ஒப்பியன் மொழி நூல்

வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி"

என்றனமயாலும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகமென விசேடித்தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறிய வதனாற் குமரியின் தெற்காசிய நாடுகளை யொழித்து, வேங்கட மலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குணகடலின் மேற்கும், குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப என்றுரைத்தார் தெய்வச் சிலையார்,

இவ்வுரையே சிறந்ததாகும்; செத்தமிழ் நிலம்,

"சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ் சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ் சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும் மங்கலப் பாண்டி வளநா டென்ப'

என்பது பிற்காலத்திற் கேற்றதாகும்:

"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொ. எச்: 4.)

என்பதால், செந்தமிழ் நாட்டெல்லை தாண்டிய பன்னிரு நாடுகள் கொடுந்தமிழ் நாடு என்பதும், அவற்றுள் விதப்பாய் வழங்கிய சொற்கள் திசைச்சொற்கள் என்பதும் பெறப்படும்.

கொடுந்தமிழ்நாடு

கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டையும்,

"தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றி யருவா வதன் வடக்கு — நன்றாய சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண்"

என்னும் வெண்பாவிற் குறிக்கப்பட்டனவாகக் கூறுவர் பல உரையாசிரியர். இவையெல்லாம் முதற்காலத்தில் செந்தமிழ் நாட்டின் பகுதிகளாகக் கொள்ளப்பட்டமையின், இவ்வுரை பொருந்தாது. இந்த கேளுள் வேணாடு புனனாடு என்ற இரண்டிற்குப் பதிலாக, பொங்கர் நாடு ஒன் நாடு என்பவற்றைக் குறிப்பர் இளம் பூரணர், சேனாவரையர் முதலியார்: பொங்கர் நாட்டைப் பொதுங்கர் நாடென்பர் இளம் பூரார்: