பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் நாடு

௧௭௯

தெலுங்கில் உடலுக்கு வழங்கும் ஒள்ளு, தேகம் என்னும் இருசொற்களில், ஒள்ளு என்பது உடல் என்னும் தமிழ்ச் சொல்விள் சிதைவு தேகம் என்பது வடசொல்,

(4) தமிழின் முன்மை :

பிற திராவிட மொழிச்சொற்கள் மூலத்திற்குத் தமிழைச் சார்ந்திருப்பதுபோல, தமிழ்ச் சொற்கள் மறித்தும் தம் மூலத் திற்குப் பிறமோழியைச் சார்த்திருப்பவையல்ல.

(5) தமிழல் திராவிட மொழிகளின் திசைவழக்குத்தன்மை.

தமிழல்லாத திராவிட மொழிகளெல்லாம், ஆரியர் இந்தியாவிற்கு வருமுன், தமிழின் கிளைவழக்குகளாகவேயிருந்தன.

தமிழிலுள்ள சொற்கள், இயற்சொல் திரிசொல் திசைச் சொல் வட சொல் என்று நால்வகையாகத் தொல்காப்பியத்தில் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், முதல் மூன்றும் தன் சொல் ; இறுதி யொன்றும் அயற்சொல்.

முதல் மூன்றனுள், முன்னிரண்டும் செந்தமிழ்ச்சொல் ; பின்னொன்றும் கொடுந்தமிழ்ச்சொல்.

செந்தமிழ்நாடு

செந்தமிழ் நிலத்தை 'வைகையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கு மாம்" என்று இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலியோர் உரைத்தனர்.

செந்தமிழ் நாட்டின் சிறந்த பகுதி இன்றும் பாண்டி நாடேயாயிருத்தலின், இவ்வரை பொருந்தாது.

"செந்தமிழ் நாடாவது:—வையையாற்றின் வடக்கும், மருத யாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமை யானும், வையை யாற்றின் தெற்காசிய கொற்கையும், கருவூரின் மேற்காசிய கொடுங்கோளூரும், மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ் திரி நிலமாதல் வேண்டுமாதலா னும், அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு:—

"வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து