பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

여의 ஒப்பியன் மொழி நூல் ஆரிய மயமாவதை அல்லது மறைந்து போவதைப் பண்டிதர் கிரையர்சன் 1906 ஆம் ஆண்டே தமது ' இந்திய மொழிக் கணக்கீடு' என்னும் நூலிற் குறித்துள்ளார். (vii) வட இந்திய மொழிகளில் திராவிட அடையாளம், ஆரியர் வருமுன் வட இந்தியாவில் வழங்கிய திராவிட மொழிகள், அவர் வந்த பின் ஆரியத்தொடு கலந்துபோனமை யால், ஆரியத்திற்கு மாறான பலதிராவிட அமைதிகள் இன்றும் வட நாட்டு மொழிகளிலுள்ளன. அவையாவன:-- (1) பிரிக்கப்படும் ஈற்று ருபால் வேற்றுமையுணர்த்தல் : (2) ஈரெண்ணிற்கும் வேற்றுமையுரு பொன்றாயிருத்தல்: (3) முன்னிலையை உளப்படுத்துவதும் உளப்படுத் தாததுமான இரு தன்மைப்பன்மைப் பெயர்கள், (4) முன்னொட்டுக்குப் பதிலாகப் பின்னொட்டு வழங்கல். | (5) வினையெச்சத்தாற் காலம் அமைதல். (6) தழுவுஞ் சொற்றொடர் தழுவப்படுஞ் சொற் றொடர்க்கு முன்னிற்றல், (7) தழுவுஞ்சொல் தழுவப்படுஞ்சொற்கு முன்னிற்றல்;+ இந்தியில் பல தமிழ்ச்சொற்களும் இலக்கண அமைதி களும் வழக்குகளும் வழங்குகின்றன: சொற்கள் : தமிழ் பொருள் ஆம் திஹாம் yes இத்தனை இத்னா இவ்வளவு உந்தனை உத்னா உவ்வளவு உம்பர் உப்பர் மேலே உழுந்து (ஒரு பயறு) பக்கம் ஓரம்

  • L. S.I. Vol. IV. pp. 446, 472-4. i Caldweli's Comparative Glammar : introduction p. 5s