பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௨௦௭

________________


மொழியாதலின், அதன் சொற்கட்குப் பொருத்தப்புகலல் என்னும் முறையில், எதையும் மூலமாகக் காட்டலாம், எப் பொருளையும் மூலப் பொருளாகக் கூறலாம்.

தீயானது பொருள்களை அழித்து விடுவதால் அஞ்சத் தக்கது சமையலுக்கும் குளிர் நீக்கவும் உதவுவதால் நன்மை செய்வது. அச்சமும் என்மைப் பேறுமே, முதன் முதல் தெய்வ வழிபாடு தோன்றிய தற்குக் காரணம்,

தீ வணக்கம் பண்டு எல்லா நாட்டிலு மிருந்தது. இன்றும், விளக்கு வடிவில் அதன் அடையாளம் இருந்து வருகின்றது. (3) நாக வணக்கம்.

இந்தியாவிலுள்ள 280 வகைப் பாம்புகளுள், அரச நாகம் (King Cobra). நல்லபாம்பு, விரியன் முதலியவை பெரு நஞ்சுடையன. இவற்றுள், அரச நாகம் உலகத்திலேயே மிகக்கொடியது. நச்சுப்பாம்புகளுள் பருமனிலும் இதுவே பெரியது. இதற்கடுத்ததே தென்கண்டத்திலுள்ள செம்பூதப் பாம்பு (Giant Brown Snake). இவற்றின் நீளம் முறையே 18 அடியும் 12 அடியுமாகும்.

அரச தாகம் அசாம், பர்மா, தென் சீனம், மலேயா, பிலிப்பைன் தீவுகள் முதலிய இடங்களிலும் வதிகின்றது.

பாம்புகளுள் மிகப்பெரியவை தென் அமெரிக்காவிலுள்ள அனக் கொண்டாவும் (Anaconda) இந்தியாவிலும் மலேயாவிலுமுள்ள பாந்தளுமே (Python) இவை 30 அடிக்கு மேற்பட்டவை: மாந்தனையும் விலங்குகளையும் பிடித்துச் சிறிது சிறிதாய் விழுங்குபவை.

கடற்பாம்புகளும், அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், அமைதிப்பெருங்கடல் ஆகிய இடங்களில் தான் மிகுதியாய் வாழ்கின்றன. ஆகையால், குமரிநாடு பாம்பு நிறைந்த இடமாகும்.

திருநெல்வேலிக் கோட்டகையின் கீழ்ப்பாகத்தில், இன்றும், நல்ல பாம்பினாலும் விரியனாலும் கடியுண்டு மக்கள் அடிக்கடியிறக்கின்றனர். ஆகையால், தமிழர் நாகத்தை வணங்கினமை வியப்பன்று:

இன்றும் தமிழ் தாட்டிலும் மலையாள நாட்டிலும் சில வீடுகளில் நாகவணக்கம் இருந்துவருகின்றது.