பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௨௨௫

தெய்வமாக்கிக் கூறியவர், சிறந்த அல்லது பெரிய அரசரைத் தெய்வ வால்மீகியைவிடக் சும்பரே இராமனைமிகுதியும்மாக வணங்குவது பண்டை வழக்கம், திருமலை நாய்க்கர் இறந்த பின்பு அவர்க்குக் கோயில் எடுத்து வழிபட்டனர். [1] திருமாலைப்போல அரசரும் காப்புத் தொழிலையுடைமையின், அவரைத் திருமாலாகக் கூறுவது தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கம் என்பதை, 'பூலை நிலை' என்பதாலறியலாம். 'முச்சக்கரமும்' என்னும் வெண்பா கரிகாலனைத் திருமாலாகக் கூறுவதையும், அரசர் நாடும் வெற்றியும் அடைவதை நில மகளையும் வயமகளையும் மணப்பதாக மெய்க்கீர்த்தி மாலைகள் கூறுவதையும், திருவுடையரசரைக் காணின் திருமாலைக் கண்டேனென்னும் என்னும் திவ்வியப் பனுவற் கூற்றையும் நோக்குக.

இராமன் தவஞ் செய்து கொண்டிருந்த ஒரு சூத்திரனைக் கொன்றும், கண்ணன் நால்வகைக் குலமும் பிரமாவின் படைப்பேயேன்று கூறியும், பிராமணீயத்தை வளர்த்ததினால் மிகப் போற்றப்பட்டதாகத் தெரிகிறது. [2]

கந்தபுராணத்தில், கந்தன் பிறப்புத் தவிர, மற்றைய வெல்லாம் (பெரும்பாலும்) தென்னாட்டுச் செய்திகளே,

பஞ்சதந்திரக் கதைகனிற் பல தென்னாட்டில் வழங்கியவை,

ஹாலாஸ்ய மான்மியம், உபமன்யு பக்த விலாசம் முதலி யவையும் பல தலப் பழைமைகளும் தென்னாட்டுச் செய்தி களைக் கூறுபவை.

அடி முடி தேடிய கதை திருவண்ணாமலையில் தோன்றியது.

முப்புரம் எரித்த கதை வடவிலங்கையில் தோன்றியது. மாந்தையிலிருந்த முக்கோட்டைகள் நிலநடுக்கத்தாலோ எரிமலையாலோ பன்முறை அழிந்து போயின. ஒரழிவு பௌத்த மதம் இலங்கையிற் புகுந்த பின் நிகழ்ந்தது. அதுவரை சைவமே அங்கு வழங்கிவந்தது. அதனால் திருமால் புத்தவடிவு கொண்டு தாரகாட்சன் முதலிய மூவரைப் பௌத்தராக்கி, பின்பு சிவ பெருமானால் அவர்க்கு அழிவு நேர்வித்ததாகக் கதை கட்டப் பட்டது. (கதிரைமலைப்பள்ளைக் காண்க.)


  1. 1. History of the Nayaks of Madura. p. 146.
  2. 2.இக்காலத்தில் வரணாசிரமத்தைத் தாங்கும் திருவாளர் காந்தியை, மகாத்மா வென்றும் முனிவர் என்றுங் கூறுதல் காண்க.