பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௨௪

ஒப்பியன் மொழிநூல்

ஆராய்ச்சி, கலிங்கத்துப்பரணி யாராய்ச்சி, சேரன் செங்குட்டுவன், ஆழ்வார்கள் காலநிலை, சாஸனத் தமிழ்க்கவி சரிதம் என்பவை மிக மிகப் போற்றற்குரியன,

நூல்களை உள்ளபடி அச்சிடுவதினும் ஆராய்ச்சி நூல்களை வெளியிடுவது சிறந்தது. ஐயங்கார் அவர்கள் நூல்களில் உள்ள சில தமிழொடு முரண் கருத்துக்கட்கு, மூன்னோரான பார்ப்பாரும் தமிழருமே காரணராவர்.

அறிவ (சித்த) மதம்

'அறிவன் தேயம்' என்று தொல்காப்பியத்திற் கூறியிருப்பதால், உருவ வணக்கத்தை (Idolatry) யொழித்த உயர்ந்த அறிவ மதமும் பண்டைத் தமிழகத்திலிருந்தமையுணரப்படும். பிற்காலத்திலிருந்த பதினெண்ணறிவரும் தமிழரே. சுடவுள் என்ற பெயர் எல்லாவற்றையும் கடந்த முழுமுதற்கடவுளைக் குறித்தல் காண்க:

வடமொழிப் பழைமை நற்பொருள்கள் பல
தென்னாட்டுச் செய்திகளேயாதல்

சதாபத பிராமணம், பாரதம், பாகவதம், அக்கினி புராணம், மச்ச புராணம் என்பவை தென்னாட்டுக் கடல்கோட் செய்தியைக் கூறுகின்றன.

திருமாலின் ஆமைத்திருவிறக்கம் :

" பாண்டி நாட்டைச் சூழ்ந்த கடல்களில், மிகப் பெரிய ஆமைகள் வாழ்கின்றன. அவற்றின் ஓடுகள் வீடுகளுக்கு முகடு போட உதவுகின்றன. ஓர் ஓட்டின் நீளம் 15 முழம். அதனடியில் பலர் நின்று வெயிலுக்குத் தப்பமுடியும் என்று மெகஸ்தனிஸ் கூறுகிறார்.[1] இது முன்னோர் கூற்றைக் கொண்டு கூறியதே.

தென்கடலில் நில நடுக்கத்தால் தத்தளித்த ஒரு மலைத் தீவையே, ஆமையுடன் இணைத்து, திருப்பாற்கடல் கடைந்த கதையைக் கட்டியிருப்பதாகத் தெரிகின்றது.

இராமாயணத்தில் முக்கியமான பகுதி தென்னாட்டுச் செய்தியே.


  1. 1. Foreign Notices of South India, p. 42.