பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௨௨௩

'அமரர் கண் மூடியும் அறுவகை யானும்' (புறத். 21) என்பதால், வாழ்த்தப்படுபொருள் ஆறென்றார் தொல்காப்பியர், "அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம்" என்று கூறினர் நச்சினார்க்கினியர். இவற்றுள், பார்ப்பார் முற்காலத்துக்கேற்காமையின், அவர்க்குப் பதிலாய்க் கூறத் தக்கது அறமேயாகும்.

"கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே"

என்பது தொல்காப்பிய நூற்பா (புறத்: 27).

இதில் 'கொடி நிலை கந்தழி வள்ளி" என்பதற்குப் பலரும் பலவாறு பொருள் கூறினர். அவற்றுள் மு. இராகவையங்கார் அவர்கள் கூறியதே உண்மையான பொருளாகும். அது 'அவை முறையே வான் நீத்தார் அறன் என்பன' என்பது.

"முதலன மூன்றும்" என்றதனால் முன்னாற் கூறப்பட்ட முதன் மூன்று பொருளும் என்றும், "வடுநீங்கு சிறப்பின்" என்றதனால், அவை மிகுந்த சிறப்புடையவை என்றும், "கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே" என்பதனால், அவை கடவுள் வாழ்த்தொடு சேர்த்து வருமென்றும் பொருள் படுவதாலும்,"முதவன மூன்றும்" என்ற சுட்டு, " அமரர் கண் முடியும் அறுவகையைத் தவிர வேறொன்றையும் தழுவ முடியாமையாலும், "கொடி நிலை சுந்தழி வள்ளி" என்ற மூன்றற்கும் ஐயங்கார் அவர்கள் கூறிய பொருள் "அமரர்கண் முடியும் அறுவகை" யில் மூன்றாயமைதலானும். இதற்குச் சிறந்த பழத்தமிழ் நூலாகிய திருக்குறட் பாயிரம் காட்டா யிருத்தலானும், வேறோருரைக்கு இடமில்லை யென்க.

"கடவுள் வாழ்த்து " என்னும் பெயரும், அதன் பின் "கொடி நிலை கந்தழி வள்ளி" என்ற முறையும். திருக்குறட் பாயிரத்தில் அமைந்திருப்பதை நோக்குக

இது மதி நுட்பத்தாலறியும் பொதுச் செய்தியாதலின், பார்ப்பார் தமிழ் மொழிக்கதிசாரியா கார் என்று யான் முற்கூறியதற்கு முரணாகாதென்க.

தமிழுக்கு இது போது தொண்டு செய்து வருவாருள், தலைமை யானவருள் ஒருவர் மு. இராகவையங்கார் அவர்கள் ஆவார்கள். அவர்கள் எழுதிய நூல்களுள், தொல்காப்பியப் பொருளதிகார'