பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௨௨

ஒப்பியன் மொழி நூல்

இடமாக்கினர் ஆரியர். திருமால் வணக்கம் வரவரச் சிறந்து வந்தமையால், பிரமா திருமாலின் மகனெனப்பட்டார் போலும், ஆரிய மறையோதுவதே சிறந்த கல்வி என்னுங் கருத்தில், கலை மகள் (சரஸ்வதி) பிரமாவின் மனைவியாகக் கூறப்பட்டாள். தமிழர் கல்வியைத் தமிழ்மாது என மொழிப் பெயராற் கூறினரேயன்றிக் கலைப்பெயராற் கூறவில்லை, ஆரியம் வருமுன் தமிழொன்றே தமிழகத்தில் வழங்கினமையின்:

பண்டைக்காலத்தில் ஒவ்வோர் அரசனிடத்தும், ஒவ்வொரு கருமான் அல்லது தச்சன் இருந்தான், அவனே ஊர்களை அல்லது நகர்களைக் கட்டுபலனாதலின், ' உலகக் சுருமான்' (விசுவகர்மா) எனப்பட்டான். 'உலக விடைகழி' என்பதில் உலகம் நகரைக் குறித்தலையும், சுருமான் என்பது கொல்லன் பெயராதலையுங் காண்க. விசுவகர்மா என்பது உலகக் கருமான் என்பதின் மொழிபெயர்ப்பே .

உலகக் கருமானுக்கு அரசத் தச்சன் என்னும் பெயருண்டு ஓ. நோ. Gr. architekton-archi, chief, and tekton, a builder. E. architect.

ஊரைக் கட்டுவது தச்சனாதலாலும், கொல்லருக்குள் சுருமான், தச்சன், கற்றச்சன், கன்னான், பொற்கொல்லன் என ஐம்பிரிவிருப்பதாலும், உலகத்தைப் படைத்தவன் முதற் கருமான் என்றும், அவன் ஐம்முகன் என்றும் ஒரு பழைமை வழக்கு தொன்றுதொட்டுக் கம்மாளர்க்குள் வழங்கி வந்திருக்கின்றது.

பிராமணர் தம் குல முதல்வராகிய பிரமனைப்படைப்புத் தெய்வமென்றும் நான்முகனென்றும் கூறியபோது, கம்மாளர்க்கு அவர் மீது பகையுண்டானதாகத் தெரிகின்றது. அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது. ஆரிய மறையை நான்காகப் பகுத்தத பிற்காலமாதலின், பிரமாவை நான் முகன் என்றது திசைபற்றி அல்லது குலப்பிரிவு பற்றியேயிருத்தல் வேண்டும்,

அறுமுறை வாழ்த்து

பாடாண் பொருள் புகழ்ச்சி, வாழ்த்து, வழுத்து என மூவகைப்படும். புகழ்ச்சியாவது ஒருவரைச் சிறப்பித்துக் கூறல் ; வாழ்த்தாவது ஒருவரை நீடு வாழ்கவென்றல்; வழுத்தாவது ஒரு தெய்வத்தைப் பராவுதல்,