பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௨௨௬

பற்றியே, இடைக்காலத்தில் இந்தியர் அயல் நாடு செல்வது ஆரியத்தால் தடுக்கப்பட்டிருந்ததென்க,

"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் குறள்-972.)

என்றார் திருவள்ளுவர்,

மக்கள் வரவரப் பெருகி வருதலையும், அதனாற் குலமும் பெருகி வருதலையும், ஒருகாலத்தில் குலமேயில்லா திருந்ததையும் நோக்குக. கபிலரகவலையுங் காண்க:

முப்படிவம் (திரிமூர்த்தம்) :

மாந்தர்க்கு முதலாவது இறப்பச்சம் பற்றி அழிவுணர்ச்சியும் பின்பு காப்புணர்ச்சியும், அதன் பின் படைப்புணர்ச்சியும் தோன்றுவதே இயல்பு. முதலாவது சிவனுக்கு அழிப்புத் தொழிலும் பின்பு திருமாலுக்குக் காப்புத் தொழிலும் கூறப் பட்டன. பின்பு படைப்புணர்ச்சி தோன்றியபோது, அதுவும் சிவனுக்கே யுரித்தாக்கப்பட்டது, ஒடுங்கின இடத்திலிருந்தே ஒன்று தோன்றவேண்டும் என்னும் கருத்துப்பற்றி.

இதே,

"தோற்றிய திதியே யொடுங்கிமலத் துள தா மந்த மாதி யென்மனார் புலவர்"

என்று சிவஞான போதத்திற் கூறப்படுகின்றது.

பிராமணர் தென்னாட்டிற்கு வந்த பின், படைப்புத் தொழிலைப் பிரித்துத் தங்கள் குல முதல்வராய பிரமாவினது என்று கூறிப் பழைமை வரைந்தனர். ஆயினும் தமிழர் ஒப்புக் கொள்ளாமையால் அவருக்குக் கோயில் வழிபாடேற்படவில்லை. இதற்குப் பிற்காலத்தில் ஒரு கதை கட்டப்பட்டது.

பிராமணரின் குல முதல்வரே பிரமாவென்பது, பிரமஸ்ரீ, பிரம தாயம் என்னும் பிராமணரைக் குறித்த சொல்வழக்குக்களாலும், வீர மகேந்திரத்திலிருந்த பிரமா கந்தனொடு போய்ச் சேர்ந்து கொண்டமையால், அடுத்த அண்டத்திலிருந்த பிரமாலைச் சூரபன்மன் வரவழைத்தான் என்னுங் கந்தபுராணச் செய்தியாலும் உணரப்படும். தி ருமால் முகில் வடிவினராதலின், மேகத்தைச் சமுத்திர மென்னும் தங்கள் மறைவழக்குப்படி, கடலை அவர்க்கு