பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள்

9

16. தழுவுஞ் சொல்லும் நிலைமொழியும் வடமொழியில் வருமொழியாயிருப்பதுண்டு. தமிழில் வழுவமைதியாயும் அருகியுமே அங்ஙனம் வரும்.

17. வினைத்தொகை வடமொழியில் இல்லை.

18. தமிழில் மிக முக்கியமாகக் கருதப்படும் பொருளிலக்கணம் வடமொழியில் இல்லை.

19. வெண்பா, ஆசிரியப்பா முதலிய பாக்களும் இவற்றின் வேறுபாடுகளும் இனங்களும் வட மொழியில் இல்லை.

20. இயல் இசை நாடகமெனத் தமிழை மூன்றாகப் பகுப்பது போல வடமொழியைப் பகுப்பதில்லை.


இனி, வடமொழி மேனாட்டாரிய மொழிகளைச் சேர்ந்ததென்பதைக் கீழ்வரும் சொற்களால் உணர்க:—

1. தன்மை முன்னிலைப் பெயர்கள்
தமிழ் Sans. Gr. Lat. Ger. Eng.
நான் aham ego ego ieh I(ie O.E.)
நாம் vayam emeis nos wir we
நீ tvam tu,su tu du thou
நீர் yuyam suge vos euch, ihr you
2. சில முறைப்பெயர்கள்
தமிழ் Sans. Gr. Lat. Ger. Eng.
தந்தை pitru pater pater vater father
தாய் matru meter mater matter mother
மகன் sunu huios sohn son
மகள் duhitru thugatar tochter daughter
உடன்பிறந்தான் bhraru frater frater bruder brother
உடன்பிறந்தாள் svasru sosor schwester sister
(orig. sostor)