பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

முன்னுரை

வடமொழிக்கும் தென்மொழிக்கும் வேறுபாடு

1. எழுத்துகளின் தொகை (உண்மையானபடி) வடமொழியில் 42; தென்மொழியில் 30.

2. வடமொழியொலிகள் வலியன; தென்மொழி யொலிகள் மெலியன.

3. மூச்சொலிகள் வடமொழியில் மட்டுமுண்டு.

4. கூட்டெழுத்துகள் தென்மொழியில் இல்லை.

5. வடமொழியில் உயிர்கள் (தீர்க்கம், குணம், விருத்தியென மூவகையில்) நெடிலாக மாறிப் புணரும்; தென்மொழியில் உடன்படுமெய் பெற்றுப் புணரும்.

6. தமிழில் மொழி முதல் இடை கடை வராத எழுத்துகளெல்லாம், வடமொழியில் மொழி முதலிடை கடை வரும்.

7. இடுகுறிப்பெயர் தமிழுக்கில்லை.

8. முன்னிலையை உளப்படுத்தும் தன்மைப் பன்மைப் பெயர் வடமொழியிலில்லை.

9. உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடு வடமொழியில் இல்லை.

10. பால்கள் வடமொழியில் ஆண்பால், பெண்பால், அலிப்பால் என மூன்று; அவை ஈறு பற்றியன; தமிழில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனப் பால் ஐந்து; அவை பொருளும் எண்ணும் பற்றியன.

11. இருமை என்னும் எண் தமிழில் இல்லை.

12. முதல் வேற்றுமைக்கு உருபு வடமொழியி லுண்டு; தென்மொழியில் இல்லை.

13. குறிப்புவினை வடமொழியில் இல்லை.

14. வடமொழியிற் பெயரெச்சமும் பெயர் போல வேற்றுமை யேற்கும்.

15. வடமொழியில் வரும் முன்னொட்டுச் (Prefix) சொற்கள் தமிழில் பின்னொட்டுச் (Suffix) சொற்களாயிருக்கும்