பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்மொழித் தோற்றம்

௨௪௧

ஓ—ஊ, ஓ—உ, ஒகரத்தை உகரமாகவும் உகரத்தை ஒகரமாகவும் ஒலிப்பது உலக வழக்கு. உயரங்குறித்து முதலாவது தோன்றியவொலி ஓகாரமே.

ஊங்கு, உம், உம்மை , உம்பர், உம்பல், உத்தரம், உச்சி, உயர், உன்னதம் முதலிய சொற்களில், ஊகாரவுகரங்கள் உயர்ச்சி குறித்தல் காண்க.

மேல் என்னும் உயரங்குறித்த சொல், மேற்சொன்ன என்று இறந்த காலத்தையும், இனிமேல் என்று எதிர்காலத்தையும் உணர்த்தல் போல, ஊகாரவுகரச் சுட்டடிப்பெயர்களும் அவ்விரு காலத்தையும் உணர்த்தும்.

கா; 'காணாவூங்கே " — இறந்தகாலம்

"உம்மை எரிவாய் நிரயத்தும்" —எதிர்காலம்

எதிர்காலம் பிற்காலம் என்று சொல்லப்படுவதாலும், பின் என்னும் பெயர் காலத்தைப் போன்றே இடத்தையும் குறித்தலாலும், பின்பக்கம் உப்பக்கம் எனப்பட்டது.

ஆகவே, உகரச்சுட்டு உன்னதம் உச்சி முதலிய சொற்களில் உயரத்தையும் : ஊங்கு. உம்பர் முதலிய சொற்களில் உயரத்துடன் இறந்தகாலத்தையும்; உம், உம்மை என்னுஞ் சொற்களில் உயரத்துடன் எதிர்காலத்தையும், உத்தரம் என்னுஞ் சொல்லில் உயரத்துடன் (நூலின்) பிற்பாகத்தையும் பிற்கூறும் மறுமொழியையும்; உப்பக்கம் என்பதில் பின்பக்கத்தையும் முதுகையும் உணர்த்துமென்க,

இடைமைச்சுட்டான உகரமும் உயரச்சுட்டான உசுரமும் வெவ்வேறு; முன்னது இயற்கையினாயது, பின்னது ஓகாரத்தின் திரிபு:

வினா :

(1) ஈற்று வினா-ஓடு

ஓகாரம் உயரச்சுட்டென்று முன்னர்க் கூறப்பட்டது. விளர்ப்பொருளில் உயரச்சுட்டுக்களே பயன்படுத்தப்பட்டன. ஒரு பொருளை எதுவென்று வினவும்போது, கீழே கிடக்கும் பல பொருள்களில் ஒன்றை மேலேயெடுத்துக்காட்டிக் கேட்டல் போன்ற வுணர்ச்சி குறிப்பாய்த் தோன்றுதலை நுண்ணிதி னோக்கி யுணர்க. சொற்கள் தோன்று முன், எதுவேண்டு