பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௪௨

ஒப்பியன் மொழிநூல்

மென்னும் கருத்தில், ஒரு பொருள் எடுத்து அல்லது குறித்துக் காட்டியே கேட்கப்பட்டது.

ஓகாரம் அவனோ, வந்தானோ என்னுஞ் சொற்களிற் போல ஈற்றுலினாவாகவே யிருக்கும்.

(2) இரு தலைவினா---ஏ:

சேய்மை யண்மை யிடைமைச் சுட்டுக்களினின்று முறையே அவன் இவன் உவன் முதலிய சுட்டுப் பெயர்களும், அன்மைச்சுட்டினின்றே முன்னிலைப் பெயரும் பிறந்தபோது, தன்னைக் குறிக்க ஓர் ஒலி வேண்டியதாயிற்று. அதற்கு உள் ளிருந்தெழுப்பப்படும் ஓர் ஒலியே பொருத்தமாகும். அவ்வொலி ஏகாரமே. உண்ட பின் வயிற்றிலிருந்து எழும் ஒலி ஏப்பம் (Eructation) என்றும், இன்பத்தில் விடும் (அடிவயிற்றினின் றெழும்) நெட்டுயிர்ப்பு ஏங்கு என்னும் சொல்லாலும் குறிக்கப் படுதல் காண்க.

ஏ என்னும் ஒலி அடிவயிற்றினின்று மேனோக்கியெழுப்பப் படுவதால், அது எழற்பொருளையும் உயரத்தையும் உண்ர்த் துவதாகும். ஏ-எ.

கா: எ—எக்கு, எழு, எடு, எம்பு, எவ்வு: ஏ—ர, ஏகு, ஏத்து, ஏந்து, ஏன், ஏர், ஏறு:

தென்னூ, நெடு, நெம்பு, சேண், மே, மேடு என்பவை, மெய்யொடு கூடிய எகர ஏகார வடியாய்ப் பிறந்தவை:

எழால், எழில், எழிலி, எழினி என்பவை எழு என்பதினடியாய்ப் பிறந்தவை,

"ஏபெற் றாகும்" என்றார் தொல்காப்பியர் (உரி. 8).

ஏண் என்பதினின்றே ஏணி, ஏணை, சேன், சேணோன் முதலிய சொற்கள் பிறக்கும்.

சேய்மையிற் செல்லுதல் அல்லது தொடர்ந்தொன்றைச் செய்தல் மேற்செல்லுதலாகக் கூறப்படும்: ஒ. நோ. go on "go on reading.

மேற்செல்லுதல் என்னும் கருத்தையே ஏ {அம்பு), ஏவு' ஏரு என்னும் சொற்கள் தழுவியன. செய்து கொண்டேயிரு